தண்ணீர் அமைப்பு, காக்கும் கரங்கள் இணைந்து நடத்திய சூழலியல் பொங்கல் விழா !
இந்நிகழ்விற்கு தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் சதீஷ்குமார் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழர்களின் வீர கலை நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் குண்டூர் மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் திரு.ராமமூர்த்தி, மாணவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் திருவளர்ச்சிப்பட்டி திரு. பொ.மாரிமுத்து வாங்கினார். பெரியார் விருதாளர் திரு.தி.அன்பழகன், தண்ணீர் அமைப்பு இணைச் செயலாளர் ஆர். கே .ராஜா செஞ்சிலுவை சங்கத்தினுடைய திரு. பவுல் பால்குணா ஆகியோர் பங்கேற்றனர் .
இயல் நாட்டார் கலை நடுவத்தினுடைய மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் சிலம்பாட்டம் நிகழ்வுகளை நடத்தினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொன்மலை சாமி சிலம்பாட்டம் தற்காப்பு கலைக்கூடத்தின் திருடி .ஜீவானந்தம் தலைமையில் சிலம்பாட்டம் நிகழ்த்தினர். திரு. கானா சதீஷ்குமார் நாட்டுப்புறப் பாடல்களை பாடினார்.
சிறுமி நறுமுகை கதை சொல்லி ஆக கதை கூறினார். மற்றும் காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பாக மகேந்திரபாபு அவர்கள் பங்கேற்று அனைவருக்கும் இலவச பழ மரக்கன்றுகள் கொய்யா, பலா, மாதுளை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான புத்தகங்களை வழங்கினார்.
திறந்தவெளியில் பொங்கல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சஞ்சய் குமார் வசீர் அகமது ஆகியோர் கவிதை வாசித்தனர். பேராசிரியர் நல்லமுத்து மற்றும் குண்டூர் நலச்சங்க பொதுமக்கள் கலை ஆர்வலர்கள் சூழலியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கனடாவைச் சேர்ந்த நண்பர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். குண்டூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.கே.ஆர் ரமேஷ் அவர்களின் ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றது.
சிறுவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது திருநங்கை ஆயிஷா அவர்களுடைய செவ்வியல் நடனம் நடைபெற்றது நிகழ்வில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி நிறைவாக அனைவருக்கும் இலவசமான மரக்கன்றுகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.
— அங்குசம் செய்திகள்.