காரைக்குடி மத்திய மின் வேதியல் ஆய்வு 23 வது நிறுவன நாள் விழா !
காரைக்குடி மத்திய மின் வேதியல் ஆய்வு 23 வது நிறுவன நாள் விழா !
தற்போது அனுப்பப்படும் சந்திராயன் போன்ற விண்கலங்கள் நாட்டின் ஒவ்வொரு துறை சார் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படை மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்கு முக்கிய பங்காற்றுகிறது. காரைக்குடியில் CSIR ன் தலைமை இயக்குனர் கலைச்செல்வி பேட்டி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மத்திய மின் வேதியல் ஆய்வு 23 வது நிறுவன நாள் நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டது.அதில் பங்கேற்க வந்த புதுடெல்லி CSIR ன் தலைமை இயக்குனர் கலைச்செல்வி இவ்வாறு கூறினார்.
மேலும், ஒவ்வொரு முறையும் விணகலம் அனுப்பும் போது CSIR ன் பரிச்சாத்யமான சோதனைக்கு பின்பே விண் கலத்திற்கான தகுதி சீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்த தலைமை இயக்குனர், விஞ்ஞான வளர்ச்சிகளை ஒப்பிடும் போது இந்தியா வெகு உயரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகளாவிய அறிவியல் தொழில் நுட்பத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் மனித வளம், மனித ஆற்றல், அறிவியல் வளர்ச்சி மற்றும் திறமை அதிகம் உள்ளதால் உலக நாடுகள் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை வியந்து பார்ப்பதாகும் தெரிவித்தார்.
-பாலாஜி