மணல் லாரி மோதி பள்ளி மாணவன் பலி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மணல் லாரி மோதி
பள்ளி மாணவன் பலி

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய ஒன்றாம் வகுப்பு மாணவன் மீது செவ்வாய்க்கிழமை மாலை மணல் லாரி மோதியதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

Sri Kumaran Mini HAll Trichy

திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பவனமங்கலம் முதன்மைச் சாலையைச் சேர்;ந்த விவசாயி கலியமூர்த்தி. இவரது மகன் கவிபாலன் (5).


கவிபாலன் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற கபிலன், மாலையில் பள்ளி வேனில் வீடு திரும்பினான்.

Flats in Trichy for Sale

வேனில் இருந்து இறங்கிய கபிலன் எதிர்புறம் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றுள்ளான். அப்போது, அவ்வழியாக மணல் ஏற்றிவந்த லாரி கபிலன் மீது மோதியது.

இவ்விபத்தில் அச்சிறுவன் வேனின் முன்சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். விபத்துக்குள்ளான மணல் லாரியின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.


இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள் ஒன்று திரண்டு மணல் லாரியின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்தினர். மேலும், மணல் லாரிகள் அக் கிராமத்தின் வழியாகச் செல்வதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.