அங்குசம் சேனலில் இணைய

கோர்ட்  படி ஏறி , கோவில் நிலத்தை மீட்ட கண்டக்டர் ! அலட்சியப்படுத்தும் அறநிலையத்துறை !

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருப்பத்தூர் மாவட்டம் , பேராம்பட்டில் உள்ள  சென்னகேசவ பெருமாள்  கோவிலுக்கு சொந்தமான சுமார்  1 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு  அதில் வணிக நிறுவனங்கள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க வேண்டும் என்று , அதே பகுதியை செர்ந்த தனியார் பேருந்து நடத்துனர் நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தார்.

சென்னகேசவ பெருமாள் கோவில்
சென்னகேசவ பெருமாள் கோவில்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ,  கோவில் நிலத்தில் ஆக்கிரமித்துள்ள  கட்டிடங்களுக்கு அறநிலையத்துறை சீல் வைக்கவும், குடியிருப்பில் உள்ளவர்களிடம் இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என கோவில் நிர்வாகத்துடன் உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

மேலும்,  கோவில் நிலங்கள் ஆக்கிரமித்தவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அளிக்க வேண்டும். கோவில் நிலத்தின் ஆக்கிரமிப்பு உறுதியானால், ஆக்கிரமிப்பு 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும், கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு  உயர்நீதிமன்றம்  உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதுவரை நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவே இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார், நடராஜன். அவரிடமே பேசினோம்.

பேருந்து நடத்துனர் நடராஜன்
பேருந்து நடத்துனர் நடராஜன்

இதுகுறித்து  வழக்கு தொடர்ந்த பஸ் கண்டக்டர் நடராஜனிடம் கூறியதாவது, “ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் அறநிலையத்துறைக்கு புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கைகள் இல்லாததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 2023 இல் வழக்கு தொடர்ந்தேன். இந்த  தீர்ப்பின் அடிப்படையில்  ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை 6 மாத காலத்திற்கு,  அவகாசம் அளித்தது. இந்த ஆறுமாத கால அவகாசமும்  19-03- 2024 தேதியுடன் முடிந்துவிட்டது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஆனால் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நடவடிக்கை மேற்கொள்ளாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய எனக்கு பொருளாதார வசதியில்லை. உத்தரவு பெற்று  என்ன பிரயோஜனம் இன்னும் ஆக்ரமிப்பை அகற்றவில்லை. ஆக்ரமிப்புகாரர்களுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கையில்லை.” என்பதாக ஆதங்கப்படுகிறார், நடராஜன்.

சென்னகேசவ பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு

சென்னகேசவ பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு

இந்த குற்றச்சாட்டு குறித்து திருப்பத்தூர் அறநிலையத்துறை அலுவலர் நரசிம்ம மூர்த்தி  தொடர்புகொண்டோம். அழைப்பை ஏற்று பேசிய அலுவலக உதவியாளர் பாலசந்தர், அலுவலர் வெளியே சென்றிருப்பதாகக் கூறியவர்  ”நீங்கள் குறிப்பிடும் பேராம்பட்டு கோவில் நிலம் 41 செண்ட் இடத்தை  மூன்று முறை அளந்துவிட்டோம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதில் 15 செண்ட் இடத்தை ஆக்ரமித்தவர் அதனை திருப்பி கொடுத்துவிட்டார். மற்ற மூன்று பேர் சிறிய அளவில் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார்கள். ஆக்ரமித்தவர்கள் அந்த இடத்திற்குண்டான அரசு மதிப்பீட்டில் பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு அதனை கோர்ட்டில் தெரியபடுத்திவிடுவோம். பணம் கொடுக்கவில்லை என்றால், ஆக்ரமிப்பு செய்த இடத்தை அகற்றி மீட்டு விடுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாக” பதிலளித்தார்.

— மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

1 Comment
  1. பாஸ்கரன் says

    கோவில் நிலங்களை பணமும் கையூட்டும வாங்கி கொண்டு பிறருக்கு விற்க அறகொள்ளைத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா.அப்படியானால் இனி தமிழக கோவில் நிலங்கள் இருக்காது

Leave A Reply

Your email address will not be published.