விருதுநகரில் ரூ.1.28 கோடி மதிப்பில் திருநங்கைகளுக்காக 21 புது வீடுகள் அரசு சார்பில் வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம். குண்டாயிருப்பு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், திருநங்கைகளுக்கான 21 தொகுப்பு வீடுகள் ரூ. 1.28 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பு வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர். ரகுராமன் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட தொகுப்பு குடியிருப்புகளில், ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி, வீடுகளை பார்வையிட்டு, பயனாளிகளிடம் குடியிருப்புக்களுக்கான சாவிகளை ஒப்படைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர், திருநங்கைகள் என்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சியில் தான் முதன்முதலில் பெயர் சூட்டப்பட்டது. திருநங்கைகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாசியர், வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வெம்பக்கோட்டை வட்டாட்சியர், திருநங்கைகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
— மாரீஸ்வரன்.