சண்டக்கோழி சூதாட்டம்.. சுற்றிவளைத்த போலீஸ்..
சண்டக்கோழி பெட்.. சுற்றிவளைத்த போலீஸ்..
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவக்கரை கிராமத்தில் மாந்தோப்பில் சட்டத்திற்கு புறம்பாக உயிரினங்களை துன்புறுத்தும் வகையில் கோழி சண்டை விட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த நபர்களை திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் அருள் குமார் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்தனர் இதில் போலீசார் பிடிக்க வருவதை அறிந்த கோழி சண்டை விட்டுக்கொண்டிருந்த அக்கும்பல் கோழிகளையும் தாங்கள் வந்த வாகனங்களையும் விட்டு தப்பியோடினர்.
காவல் உதவி ஆய்வாளர் அருள்குமார் சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்களை பிடித்து வழக்கு பதிவு செய்தார்..
-ஜித்தன்