மக்களை ஏமாற்றி விட்டார் முதல்வர் ஸ்டாலின் – த.மா.கா. ஜி.கே.வாசன் தடாலடி பேட்டி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசணைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் விமானப்படை சாகசங்கள் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இதனை விமானப்படையின் சாகசமாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தியாவின் பலம் மற்றும் வளர்ச்சியை நம் நாட்டு மக்கள் மட்டும் தெரிந்து கொள்வதோடு, உலக மக்களே அறிந்து கொள்ளும் வகையில் இந்த சாகச நிகழ்ச்சி அமைந்தது. அதனை தமிழக அரசு முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

தீபாவளி வாழ்த்துகள்

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

இந்நிகழ்ச்சியை காண மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். தமிழக அரசின் அலட்சியத்தால் 5 பேரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் சரியில்லாதது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாதது, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது இதற்கு முக்கிய காரணமாகும். நிகழ்ச்சியை காண வந்தவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாயினர். அரசின் அஜாக்கிரதையால் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக  அறிவித்திருப்பது போதுமானதல்ல. விலைமதிப்பில்லாத அவர்களின் உயிருக்கு 25 லட்சமாவது நிதி உதவி வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தாமாக சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கூட்டணிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பணிபுரிகின்றனர். இங்கு அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள் காரணமாக அப்பாவி உயிர்கள் பலியாகின்றன. இதனை தடுக்க பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்து தடுப்பு கருவிகளை அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது அதிகாரிகள் சோதனையிட வேண்டும். அப்போதுதான் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும். இல்லையென்றால் அப்பாவி மக்களின் உயிர் பலி என்பது தொடர்கதை ஆகும்.

இன்னும் சில நாட்களில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விழாக்களும் அடுத்த சில நாட்களில் தீபாவளியும் வருவதால் ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை இருப்பு சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க அரசு முன் வர வேண்டும். தேவையான பொருட்களை பொதுமக்களை அலைக்கழிக்காமல் வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் அருகிலேயே போதைப் பொருட்கள் விற்கப்படுவது  மிகவும் ஆபத்தானதாகும். இளைய சமுதாயத்தினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகில் போதை பொருட்கள் விற்பதை தடுக்க சிறப்பு போலீசார் தலைமையில் தனி குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் டாஸ்மாக் தான். டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிறகு அதனை செயல்படுத்த முடியாத கையால் ஆகாத அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. மூடக்கூடாது என்ற குறிக்கோளுடன் இருக்கும் திமுக அரசு மத்திய பாஜ அரசு மீது பழி போட்டு தப்பிக்க முயற்சிக்கிறது. மக்கள் இந்த அரசை கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இனியும் அவர்கள் உங்களை நம்ப தயாராக இல்லை. வரும் தேர்தல் உங்களுக்கு அதற்கான பாடமாக அமையும்.

தென்மேற்கு பருவமழை இயல்பை விட தமிழகத்தில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை போன்ற மாநகராட்சி பகுதிகளில் மட்டுமின்றி நகராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் மழைக்கு முன்னரே தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மதுரை போன்ற பெரிய நகரங்களில் சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மழைநீர் தேங்கி நிற்கும் போது பள்ளம், மேடு தெரியாமல் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. பெருமழை வருவதற்குள் சாலைகளை செப்பனிட வேண்டும்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் சுமை குறையும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் மூன்றரை ஆண்டுகளாகியும் அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் மக்களை ஏமாற்றி விட்டார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளது. வருவாய்த்துறை, போக்குவரத்து, ஆசிரியர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என யாருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் பால் விலை, வீட்டு வரி, சொத்து வரி, தன் தண்ணீர் வரி, பத்திரப்பதிவு வரி உயர்வு போன்ற சுமைகளை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறது. கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த அரசுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் வரத் துவங்கியுள்ளன. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ஜனநாயகம் வளர வேண்டும் என்ற முடிவை பிரதமர் எடுத்தார். சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரிதும் எதிர்த்த காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தாலும், மாநில கட்சிதான் முன்னிலையில் உள்ளது. பாஜ தனி கட்சியாக 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க உள்ளது. இது பாஜவை மக்கள் அதிகம் எதிர்க்கவில்லை என்ற மனநிலையை காட்டுகிறது. ஹரியானாவில் பாஜ மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆட்சியாளர்களின் நல்ல செயல்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது.

ஆட்சியில் பங்கு என்பதை கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமல்ல தொண்டர்களும் இதனை எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு காங்கிரசுக்கும், வீசிகவுக்கும் உள்ளது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 10, 20 எம்பி சீட்டுகளை கொடுத்துவிட்டு மத்தியில் ஆட்சியில் பங்கு கேட்கும் திமுக, அதிமுக கட்சிகள் சட்சபையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் தருவதில் எந்த தவறும் இல்லை. 60 ஆண்டுகள் தனித்து ஆட்சி செய்யும் திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்பள்ளி வைக்கும் வகையில் கூட்டாட்சிக்கு அனைத்து கட்சிகளும்  தயாராகிவிட்டன. கூட்டணி கட்சியினரின் எண்ணம் நிறைவேற வேண்டுமானால் அதற்கு ஒரு இலக்கு தேவை. அதனை கூட்டணிக் கட்சிகளால் தான் நிர்ணயிக்க முடியும். நடிகர் விஜய் துவங்கிய கட்சிக்கு தமாகா சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளோம். அவரின் இலக்கு என்ன, மக்களுக்கு அவர் செய்யும் நற்பணிகள் என்ன என்பதை பொறுத்து தான் மக்கள் அவருக்கு அங்கீகாரம் அளிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

 

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.