ஆண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற தாய்.
பிறந்து சில மணி நேரமே ஆனஆண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற தாய்.
திருச்சி மாவட்டம் ,துறையூர் அடுத்த உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பச்சபெருமாள்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் முட்செடி புதரில் கிடந்தது.
இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையை பெற்று முட்புதரில் வீசி எறிந்த தாய் யார் எனவும், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காகவும் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.