அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

டாஸ்மாக் கடையில் மோதல் ! வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மேகுடி, குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 23) திருச்சி குழுமணி கீழ மோலங்குடி பகுதியைச் சேர்ந்தவர்  மணிகண்டன், அவரது சகோதரர் கார்த்திக். சந்தோஷ் மணிகண்டனும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் மூன்று பேரும் பேரூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்றனர். பின்னர் மதுபானம் வாங்கிக் கொண்டு திரும்பிய போது குழுமணி கோழிக்கார தெரு பகுதியைச் சேர்ந்த  17 வயது சிறுவன், குழுமணி வீரத்தாய் அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (19 ) அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா (20) மோகன் (26) தினேஷ்குமார் (21 ) கார்த்திகேயன் (19 ) ஆகிய ஆறு பேரும்  அவர்களை வழிமறைத்து தகராறு செய்தனர். சந்தோஷ் தரப்பினர் அவர்களை தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் தரப்பினர் 6 பேரும் சேர்ந்து அவர்களை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் சந்தோஷ், மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரையும் தாக்கினர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத சஞ்சய் தரப்பினர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கே சென்று மருத்துவமனைக்குள் நுழைந்து மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் மீண்டும் சந்தோஷ், மணிகண்டன், கார்த்திக் ஆகியோருக்கு தலை தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் உறவினர்கள் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சந்தோஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் 17 வயது சிறுவன், சஞ்சய், ஜீவா ,மோகன், கார்த்திகேயன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.

யாவரும் கேளீர்

மேலும் தலைமறைவான தினேஷ் குமாரை போலீசார்  தேடி வருகின்றனர். இது குறித்து ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தோஷ், மணிகண்டன் ஆகிய இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.