கலெக்டரே வீடுதேடி வந்தாருய்யா…
கலெக்டரே வீடுதேடி வந்தாருய்யா…
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடை நின்ற சுமார் 1898 மாணவர்களை கண்டறிந்து, இவர்களில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீண்டும் கல்வி தொடர வழி வகை செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
இடைநின்ற மாணவர் களையும் அவர்களது பெற்றோர்களையும் அணுகி, அவர்கள் இடைநின்ற தற்கான சமூக காரணிகளை ஆராய்ந்து, இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வி தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, இடைநின்ற மாணவர்களின் பட்டியலை கையில் எடுத்துக்கொண்டு, அந்தந்த ஏரியாவின் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையிலான ஆசிரியர்களையும் அழைத்துக்கொண்டு இடைநின்ற மாணவர்களின் வீடு தேடி கதவை தட்டியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
அங்குசம் இதழ் சார்பாக, மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு பேசியபோது, “பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வர செய்யும்போது குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்படுகின்றன. இளம் வயது தாய்மார்களின் மரணங்கள் தடுக்கப்படுகின்றன. தற்போது வரை சுமார் 605 மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்” என்கிறார் பூரிப்போடு.
– மணிகண்டன்