வார்டு செயலாளரை போற்றிய உடன்பிறப்புகள்… !

0

வார்டு செயலாளரை போற்றிய உடன்பிறப்புகள்…

மதுரை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி ஏற்பாட்டில் செப்.21 ல் மதுரை கல்லூரி மைதானத்தில் தி.மு.க ஏற்றத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆயிரம் பேருக்கு ரூ 10,000/-& பத்தாயிரம் மற்றும் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.

2 dhanalakshmi joseph
4 bismi svs

நெல்பேட்டை பகுதி 49வது வட்ட கழகத்தின் சார்பில் தகுதியானவர்கள் என கண்டறிந்து 15 பேரை பரிந்துரைக்க, அதில் 10 பேருக்கு மட்டுமே தலைமை பரிசுத்தொகை வழங்கியது. பாக்கி 5 பேரின் மனது புண்படக்கூடாதென்று கருதிய வார்டு செயலாளர் பிஸ்மில்லாகான், பரிசு பெற்ற 10 பேரிடமிருந்தும் தலா 2500 ஐ திரும்பப்பெற்று, அந்த 5 பேருக்கும் தலைக்கு 5000 ஆக
பிரித்து கொடுத்துள்ளார்.

பத்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கு பரிந்துரைக்க கட்சிக்காரனே ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்ட நிகழ்வுக்கு மத்தியில், வயதில் சிறியவராக இருந்தாலும் சமயோசிதமாக சூழலை கையாண்ட வார்டு செயலாளர் பிஸ்மில்லாகானை பெருமையாக பேசுகிறார்கள் மதுரை உடன்பிறப்புகள்.

- Advertisement -

- Advertisement -

– ஷாகுல், படங்கள்: ஆனந்த்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.