அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“நட்பு பாராட்டும் பாட்ஷா-வா? அந்த அண்டனியா?” முடிவெடுங்கள் இராகுல் !

திருச்சியில் அடகு நகையை விற்க

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான இராகுல்காந்தி அவர்களுக்கு, வணக்கம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரியானா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நல்ல வெற்றியைப் பெற்ற உங்கள் கட்சி அதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது. தேர்தல் முறைகேடுகள் குறித்து நீங்கள் வெளியிட்ட பல ஆதாரங்கள் மக்களிடம் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடந்த  பீகார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதளம் + காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் போட்டியிட்ட மொத்தத் தொகுதியில் ஒற்றை எண்ணிக்கையில் மட்டுமே வெற்றி பெற்றது. தலைநகர் தில்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தேடவேண்டிய நிலையே ஏற்பட்டது. வடமாநிலங்களில் ஜார்க்கண்ட் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் மட்டுமே உங்கள் கட்சி கூட்டணி ஆட்சியில் உள்ளது. தென்மாநிலத்தில் கர்நாடகம், தெலங்கனாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளது. கேரளாவில் உங்கள் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே தேசிய அளவில் NDA கூட்டணியில் இருந்தாலும் மாநிலத்தில் இருகட்சிகளும் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிடுகின்றன.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

வடமாநிலங்களில் உங்கள் கட்சியின் ஆட்சி எப்படி எட்டாக் கனியாக உள்ளதோ அதைப்போலவே தமிழ்நாட்டிலும் உங்களின் ஆட்சி எட்டாக் கனியாகவே இருக்கின்றது. என்றாலும் திமுகவோடு இணைந்து காங்கிரஸ் உயிர்ப்போடு இயங்கி வருகின்றது.  காங்கிரஸ் கட்சி தென்மாநிலங்களில் கேரளா, கர்நாடகம், தெலுங்கனாவில் வெற்றி பெற்று 100 எண்ணிக்கை பெற்றது. அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற தகுதி நிலையைப்  பெற்றது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரி உட்பட 40க்கு 40 வெற்றிபெற்று உங்கள் எதிரிக்கட்சியான பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச்சு முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் தமிழ்நாட்டு தேர்தல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில், உங்கள் காங்கிரஸ் கட்சியில் ஒரு புதிய எழுச்சிக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. “சட்டமன்றத்தில் அதிக இடங்களில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்பதே அந்தக் குரல். இதை மாணிக்தாகூர், ஜோதிமணி போன்ற மக்களவை உறுப்பினர்களும்;  திருச்சி வேலுச்சாமி போன்றவர்களும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறும்… அல்லது வெளியேற்றப்படும் என்று ஆரூடம் சொல்லி வருகின்றன.

இவையெல்லாம் உங்கள் செவிகளுக்கு எட்டியதா தெரியவில்லை !  உங்களின் ஆசீர்வாதத்தோடுதான் இந்தக் குரல்கள் எழுப்பப்படுகின்றனவா, என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

விஜய்
விஜய்

காரணம், கரூர் சம்பவம் தொடர்பாக நீங்கள் நடிகர் விஜயிடம் பேசினீர்கள். உடனே கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, “விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் காங்கிரஸ்-இல் இணைய விருப்பம் கொண்டிருந்தார்” என்று பேசினார். உங்களின் மனத்திற்கு நெருக்கமான நண்பர் பிரவீண் சக்கரவர்த்தி தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய் அவர்களைச் சந்தித்துப் பேசியதோடு, “திமுக ஆட்சி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடலாம். கூட்டணி வெற்றிபெற்றால் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கிடைக்கும்” என்று செய்தியாளர்களிடம் அவர் கொளுத்திப்போட்டார்.

“காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் மகிழ்ச்சியடைவோம்” என்று பட்டும்படாமலும் பேசினார், தமிழகத்திற்கான மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். “திமுகவிடம் அதிக இடங்களைக் கேட்பது எங்கள் உரிமை. ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கேட்பது எங்கள் கடமை. இறுதி முடிவு செய்யவேண்டியது திமுகவும், காங்கிரஸ் மேலிடமும்தான்” என்று நைசாக நழுவினார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை. இதற்கு மத்தியில்தான், “கூட்டணியில் எங்கள் ஓட்டு இனிக்கிறது. ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்றால் கசக்கின்றது என்றால் கூட்டணிக்கான பொருள் என்ன?” காட்டமாகப் பேசியிருந்தார், மக்களவை உறுப்பினர் மாணிக்தாகூர்.

இந்த பின்னணியில், தனியார் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் கூடலூருக்கு வந்த நீங்கள், “ஜனநாயகன் திரைப்படத்திற்கு அனுமதி வழங்காமல் ஒன்றிய அரசின் துணையோடு தணிக்கைத் துறை காலதாமதம் செய்துவருகின்றது” என்று குற்றம்சாட்டினீர்கள். இது குறித்து தனிப்பட்ட முறையில் நடிகர் விஜயும் அவரது கட்சியுமான தவெக-வும் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கும்போது உங்களின் கண்டனம் கவனத்தை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது முளைத்துக் கொண்டிருக்கும் “ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு” என்னும் புதுக்குரலுக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

இறுதியாக,  “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் கழகத்தின் தலைவர் தளபதி எங்களிடம் கூறிவிட்டார்” என்று காங்கிரஸ் கட்சிக்குப்  பதிலடி கொடுத்துள்ளார், அமைச்சர் ஐ.பெரியசாமி. கூட்டணியில் முரண்டு பிடித்தால், காங்கிரஸ் இல்லாமல் சட்டமன்றத் தேர்தலைத் சந்திக்க திமுக தயாராகிவருகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இனியும் ஒரு தெளிவான முடிவெடுப்பதில் காலம் தாழ்த்தினால், காங்கிரஸ் தொண்டர்கள் தவெக பக்கம் போகவும் வாய்ப்பிருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் கணிக்கிறார்கள். முடிவு உங்கள் கையில் !

—  தமிழன்புடன் : ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.