பாலியல் புகாரில் சிக்கிய காங்கிரஸ் தொழில் அதிபர் – கட்சியில் இடை நீக்கம்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

பாலியல் புகாரில் சிக்கிய காங்கிரஸ் தொழில் அதிபர் – கட்சியில் இடை நீக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரத்தை சேர்ந்தவர் அப்துல் கனிராஜா (55). இவர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார். முக்கியமானவர்களுக்கு கொடைக்கானல் பகுதிகளில் இடம் வாங்கி கொடுப்பது, விற்பது போன்ற தொழிலையும் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அப்துல் கனிராஜா
அப்துல் கனிராஜா

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இவருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் நாயுடுபுரம் பகுதியில் உள்ளது. இவருக்கு சொந்தமான விடுதியில் கடந்த 7 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், வழக்கறிஞருமான ராஜசேகர் மற்றுமு் அவரது மனைவி 2 குழந்தைகள் மற்றும் தோழி, அவரது குழந்தைகளுடன் 2 அறைகள் எடுத்து தங்கி இருந்தனர்.

3

இந்நிலையில் வழக்கறிஞர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் உடன் வந்தவர்கள் சுற்றுலா இடங்களை கண்டுகளிக்க சென்றுவிட்டனர். பெண் மட்டும் விடுதி அறையில் தனியாக இருந்ததை அறிந்த அப்துல் கனி ராஜா அவரது அறைக்கு சென்று மருத்துவ உதவி செய்வதாக கூறி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த அறையை காலி செய்து விட்டு வேறு தங்கும் விடுதிக்கு சென்று உள்ளார்.

அப்துல் கனிராஜா
அப்துல் கனிராஜா – கைது செய்த போது… 
4

இதனால் அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞரின் மனைவி இதுதொடர்பாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர்.

இதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துல் கனி ராஜாவை அதிரடியாக கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் மேல் விசாரணை நடத்துவதற்காக திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன், கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் விசாரணை நடத்தினர்.

அப்துல் கனிராஜா
கொடைக்கானல் காவல்நிலையம்..

பின்னர், அப்துல்கனி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு சென்றனர். அப்போது காவல் நிலைய வாசலில் அவர் மயங்கி விழுந்தார்.

அவரை மீட்ட அவரது உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து பல மணி நேரத்திற்கு பிறகு காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அப்துல் கனிராஜா
அப்துல் கனிராஜா – மருத்துமனையில் இருந்து தூக்கி வரும் போது… 

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி 12.05.2023  வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து எஸ்.அப்துல்கனி ராஜா, மேலிட தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவுறுத்தலின் படி தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுகிறார்.

தம் மீதான நடவடிக்கை குறித்து உரிய விளக்கத்தை 7 நாட்களுக்குள் காங்கிரஸ் தலைமைக்கு அவர் தெரிவிக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.