காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது – ராமசுப்பு உரை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது – என்று கோவில்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு பேச்சு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார, நகர, கிராம காங்கிரஸ் கமிட்டி வார்டு மறு சீரமைப்பு பணிகளுக்கான ஆய்வு கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர்‌ மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் காமராஜ், பொன் சக்தி மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

காங்கிரஸ் கட்சி கூட்டணி
காங்கிரஸ் கட்சி கூட்டணி

இதில்  சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு கலந்து கொண்டு  மறு சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு பேசுகையில்,

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் கட்சியை தூக்கிப் பிடிக்க முடியும் , எல்லா இடத்திலும் காங்கிரசுக்கு என்று வாக்கு வங்கி உள்ளது . காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது. இதை எல்லோரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். உங்கள் கட்சியில் செயல் வீரர்கள் உள்ளார்களா என்று மக்கள் கேட்கின்றனர். ஆகையால் அது நாம் உருவாக்க வேண்டும். கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் உருவாக்க முடியும், நாலு பேர் நம்மைப் பார்த்து என்னைக்கு வந்தீர்கள் என்று கேட்பார்கள், கேட்கத்தான் செய்வார்கள். ஏனெனில் நாம் கூட்டணியோடு ஓடிக் கொண்டிருப்பதால் நம்மை கேட்கின்றனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தனியாக நின்று வெற்றி பெற்றிருந்தால் கேள்வி கேட்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி வலுவான கட்சியாகத்தான் இருக்கிறது. கட்சியின் அடிப்படைகளை சரி செய்ய வேண்டும் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்றார் .

இதில் கோவில்பட்டி சட்டமன்ற பொறுப்பாளர்கள் காமராஜ், பொன்னுசாமி பாண்டியன், அருண் பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற பொறுப்பாளர் பிரேம்குமார், பெத்துராஜ், ஆறுமுகசாமி, ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் மாரிமுத்து, வீரபாகு, மாவட்ட பொது செயலாளர்கள் INTUC ராஜசேகரன், சண்முகராஜா, மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, ஊடக பிரிவு தலைவர் ராஜசேகரன் , மாவட்ட செயலாளர் துரைராஜ்,   வட்டார தலைவர் செல்லதுரை, விவசாய பிரிவு தலைவர் பேரையா, வட்டார தலைவர்கள் அபிஷேக், ராக்கன், விஜய், ஓட்டப்பிடாரம் சமூக ஊடக பிரிவு தலைவர் ஜேம்ஸ் லாரன்ஸ், SMT ராஜா,ஆனந்த், தாஸ்,அய்யதுரை, ஆரோக்கியசாமி, இயேசுவடியன், ஆல்வின், வேல்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனர். pcc உறுப்பினர் மகேஷ்குமார் நன்றி கூறினார்.

 

—  மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.