தேனி – ஓய்வு பெற்ற தலைமையாசிரியரின் நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் !!
தனது 3 ஏக்கர் நிலத்திற்கு செல்ல விடாமல் தன்னுடைய 17 சென்ட் நிலத்தை ஆக்கிரப்பு செய்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அய்யநாச்சியார் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் போடி தாலுகா உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அய்யநாச்சியார்.
இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனியாக வசித்து வருகிறார்.
இவரது தந்தை உயிலாக எழுதிக் கொடுத்த நிலத்தில் 17 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துக்கொண்டு, தன்னுடைய மூன்று ஏக்கர் நிலத்திற்கு செல்லவிடாமல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார்.
மேலும் நிலத்தில் விளையும் தேங்காய் மற்றும் காய்கறிகளை வெளியே எடுத்து செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.
நீதிமன்றத்தில் கடத்த 2019 ஆம் ஆண்டு அய்ய நாச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றது.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நிலத்தை விலைக்கு வாங்கி ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள குண்டல் நாயக்கன்பட்டி சேர்ந்த ரவி முத்து என்கிற மின்னல் ரவி, அய்யநாச்சியார் இடம் சுமார் 17 சென்ட் இடத்தை ஆக்கிரப்பு செய்து வைத்துக்கொண்டு அய்ய நாச்சிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே அய்யநாச்சி தன்னுடைய நிலத்திற்கு செல்ல விடாமல் தன்னுடைய 17 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதை மீட்டு தர கோரி வீரபாண்டி காவல்துறை மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட ஆட்சித் தலைவரும், தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
— ஜெய்ஸ்ரீராம்.