தென்கொரியாவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தலைமை காவலர் மாரியப்பன் !
தேனி மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் மாரியப்பன், தென் கொரியாவில் சங்கிலி குண்டு எரிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
தென்கொரியாவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தலைமை காவலர் மாரியப்பன் !
தேனி மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் மாரியப்பன், தென் கொரியாவில் சங்கிலி குண்டு எரிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் மதுரை வேளாண்மை கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி படிக்கும் போதே பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். 2023ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டி, இரண்டாவது போட்டி தென் கொரியாவின் தென்மேற்கு மாகாணமான ஜியோன் பெக் நகரத்தில் 12 முதல் 20 தேதி வரை நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 71 நாடுகளை சேர்ந்த 14177 பேர் கலந்து கொண்ட 26 விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.
தமிழக காவல் துறைக்கும், தமிழ்நாட்டிற்கும், பெருமை சேர்க்கும் விதமாக இந்த விளையாட்டு போட்டியில் சங்கிலி குண்டு எரிதல் (Hemmer throw) போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
மேலும் ,
* 2009 ஆம் ஆண்டு 68 1/2 கிலோ எடையை பல்லில் கடித்து தூக்கி உலக சாதனை படைத்துள்ளார்.
* 2010 ஆம் ஆண்டு 40 கிலோ எடையை பல்லில் கடித்து தூக்கி 30 மீட்டர் நடந்து சாதனை படைத்துள்ளார்.
* 2011 ஆம் ஆண்டு 40 கிலோ எடையை பல்லில் கடித்து தூக்கி 40 மீட்டர் நடந்து சாதனை படைத்துள்ளார்.
* 2014 ஆம் ஆண்டு 30 வினாடிகளில் 60 முறை கையை சுழற்சி செய்து சாதனை உலக சாதனை படைத்தார்.
* 2016 ஆம் ஆண்டு கொடைக்கானல் ஏரியை சுற்றி ஒற்றைக்காலில் பின்னோக்கி குதித்து நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 12 – 22 தேதி, 4th நேஷனல் மாஸ்டர் கேம்ஸ் குண்டு எரிதல் போட்டியில் இரண்டாம் இடம், வட்டு எரிதல், சங்கிலி குண்டு எரிதல் போட்டியில் மூன்றாம் இடம் என தொடர்ந்து விளையாட்டு துறையில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார், தலைமைக் காவலர் மாரியப்பன்.
-ஜெ.ஜெ