தேனியில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படும் மான்கள் ! நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?
சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
தேனியில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படும் மான்கள் ! நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?
தேனியில் சட்டவிரோதமாக வீட்டில் மறைத்து வைத்திருந்த மான் கொம்பை வைத்திருந்த நபரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கணபதி அக்கரக்காரத் தெருவை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவரது வீட்டில் முருகன் என்பவர் நீண்ட காலமாக வசித்து வருகிறார். தன்னை சித்தர் என்று கூறிக் கொள்ளும் முருகன் இரவு நேரத்தில் சங்கு ஊதி அப்பகுதி மக்களுக்கு இடையூறு செய்வதாகவும் மேலும் வாடகை வீட்டில் மாந்திரீக, நிர்வாண பூஜைகள் செய்வதாகும் இதை கேட்க சென்ற வீட்டின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை முருகன் அடையாளம் தெரியாத நபருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து தன் வீட்டில் இருந்த மான் கொம்பை துணியால் கட்டி அதை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றார். இதை கண்ட வீட்டின் உரிமையாளர் தேனி மேகமலை கோட்ட புலிகள் காப்பக வனத்துறையினரிடம் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் வனத்துறையினர் முருகன் தங்கியிருந்த வீடு மற்றும் இருசக்கர வாகனத்தில் மான் கொம்பை எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்.
முருகனை கைது செய்து விசாரணைக்குட்படுத்த வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
-ஜெ.ஜெ