சொந்த தொகுதிக்கு எதுவுமே செய்யாத ஓ.பி.எஸ். ! தங்கத் தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு !!

5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் போடிக்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை என்றும் போடி சட்டமன்ற உறுப்பினரான ஓ. பன்னீர்செல்வம் கேரளாவில்  ஆயில் மசாஜ் செய்து  வருவதாக தகவல் வந்துள்ளதாக கூறினார்.

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

சொந்த தொகுதிக்கு எதுவுமே செய்யாத ஓ.பி.எஸ். ! தங்கத் தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு !!

15 ஆண்டுகளாக போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயித்த ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதிக்கு எதுவுமே செய்யாமல் கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருவதாக தகவல் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

100 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஊரக வளர்ச்சித் துறை  அமைச்சர் ஐ பெரியசாமி 28-ஆம் தேதி திறந்து வைக்க உள்ள நிலையில் செய்தியாளர்களை சந்திந்த அவர், தொகுதியின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஓ.பி.எஸ். செயல்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை போடிநாயக்கனூரில் 100 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம் நிறைவு பெற்ற நிலையில் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி வருகை தர உள்ளனர்.

3

திட்டத்தை தொடங்கி வைக்க  போடி சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் வருவது வராமல் இருப்பது அவருடைய தனி விருப்பம் என்றும் கூறினார்.

மேலும், போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயித்ததற்கு பிறகு இதுவரை அவர் எத்தனை முறை போடிநாயக்கனூருக்கு வந்துள்ளார் என்றும் தோற்றுப்போன தங்க தமிழ்ச்செல்வன் தான் அடிக்கடி போடிநாயக்கனூருக்கு வருகை தந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதாகவும் கூறினார்.

4

15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் போடிக்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை என்றும் போடி சட்டமன்ற உறுப்பினரான ஓ. பன்னீர்செல்வம் கேரளாவில்  ஆயில் மசாஜ் செய்து  வருவதாக தகவல் வந்துள்ளதாக கூறினார்.

கொட்டக்குடி  ஆற்றின் குறுக்கே கொம்பு தூக்கி அருகே அணைகட்ட ரூபாய் 500 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் விரைவில் திட்டம் துவங்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். தேனி மாவட்டத்தின் புதிய திட்டமாக 20 கோடி மதிப்பில் உணவு பூங்கா அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

-ஜெ.ஜெ

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.