குறவர் இன மக்கள் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாதா ? நவீன தீண்டாமை !

இந்த சமூகத்திற்கு இன்னும் பெரியாரும் அம்பேத்கரும் தேவைப்படுகிறார்கள் என்பதை மண்டையில் உரைக்கும்படி உணர்த்தியிருக்கிறது, இந்த சம்பவம்.

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

குறவர் இன மக்கள் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாதா ? நவீன தீண்டாமை !

வயித்துப் பசிக்கு சோறு போட்டது குத்தமா? தேனியில் நரிக்குறவர்களை  ஹோட்டலுக்கு அழைத்து சென்று  உணவு வாங்கி கொடுத்தவரை அந்த ஹோட்டலின் ஊழியர்களே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கேரளா மாநிலம் மலபுரம் பகுதியை சேர்ந்தவர் சித்திக். தமிழகத்தில் உள்ள ஏர்வாடிக்கு பணி நிமித்தமாக வந்தவர், போகும் வழியில் தேனி பேருந்து நிலையத்தில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

3

தட்டி விலாஸ் என்ற ஹோட்டலுக்குள் அவர் நுழையும்போது, அங்கிருந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்டு நான்கு பேர் அவரிடம் உதவி கேட்டிருக்கின்றனர். பணமாக தரமாட்டேன். வேண்டுமென்றால் சாப்பாடு வாங்கித் தருகிறேன். என்றுகூறி அவர் சாப்பிட சென்ற அதே ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்து இன்னும் சிலரையும் அதே ஹோட்டலில் சாப்பிட வைத்துள்ளார். தொடர்ந்து நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களை தங்களது ஹோட்டலுக்கு அழைத்து சாப்பிட வைத்த சித்திக் மேல் ஆத்திரமுற்ற அந்த ஹோட்டல் ஊழியர்கள் சித்திக்கை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

4
சித்திக்
சித்திக்

இத்தாக்குதல் சம்பவம் குறித்து அப்பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு, 108 ஆம்புலன்ஸ் உதவியோடு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நரிக்குறவர்களை சாப்பிட அனுமதித்தால், மற்றவர்கள் ஹோட்டலுக்கு சாப்பிட வரமாட்டார்கள் என்றுகூறி, இரக்க குணத்தோடும் மனிதாபமானத்தோடும் உதவ முன்வந்தவரை, மனிதாபமின்றி தாக்கியிருக்கின்றனர், ஹோட்டல் ஊழியர்கள்.

இரட்டைக் குவளை முறை, உணவகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருக்கையில் அமர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டுமென்ற தீண்டாமை கொடுமைகள் பற்றியெல்லாம் கேள்விபட்டிருக்கிறோம். அதை சமகாலத்தில் நினைவுபடுத்தியிருக்கிறது, இந்த சம்பவம்.

இந்த சமூகத்திற்கு இன்னும் பெரியாரும் அம்பேத்கரும் தேவைப்படுகிறார்கள் என்பதை மண்டையில் உரைக்கும்படி உணர்த்தியிருக்கிறது, இந்த சம்பவம்.

 

-ஜெ.ஜெ

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.