அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பல சிக்கல்களை உண்டாக்கும் மலச்சிக்கல் ! வாழ்க்கை வாழ்வதற்கே – தொடர் 04

திருச்சியில் அடகு நகையை விற்க

இன்றைய பாஸ்ட் புட் உணவு பழக்க வழக்கத்தின் கொடை என்றே சொல்லலாம். இந்த சிக்கல் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான வெளிப்பாடுகளை கொண்டதாக இருக்கும்.

மலம் கடினமாகி வெளியேறும் போது வலி ஏற்படுவது. மலம் அடிக்கடி வராமல், இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட தாமதமாக வெளியேறுவது. வெளியேறும் அளவு குறைவாக இருப்பது. வயிற்றில் அடைப்பு எடை வீக்கம் சிரமம் போன்ற உணர்வு ஏற்படலாம்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இவற்றுக்கான பொதுவான காரணங்களாக, சிலவற்றை பட்டியலிடலாம். தண்ணீர் குறைவாக குடிப்பது; நார்ச்சத்து குறைவான காய்கறி பழங்களை சாப்பிடுவது; உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது; நேரம் தவறி கண்ட நேரத்திற்கு சாப்பிடுவது; மலம் கழிக்கும் உணர்வு தோன்றும்போதே, அதனை செய்து முடிக்காமல் தள்ளிப்போடுவது; வேறு ஒரு நோய்க்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் பொதுவில் உடல் நலக் கோளாறுகள் ஆகியவை அமைகின்றன.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த சிக்கலிலிருந்து விடுபட விரும்புவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், பழங்கள், காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உங்களது வேலை பாணிக்கு ஏற்ற வகையில், சீரான கால இடைவெளியில் மூன்று வேளை உணவுக்கான நேரத்தை வரையறுத்துக் கொள்ள வேண்டும். தினமும் தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். யோகா முயற்சிக்கலாம். மிக முக்கியமாக, என்னதான் அவசர வேலை இருந்தாலும், மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்ட உடனேயே அவற்றை நிறைவேற்றிவிட வேண்டும். கடுமையான மலச்சிக்கல்  நீண்ட காலம் இருந்தால் மருத்துவரை அவசியம் அணுகி ஆலோசனை பெற்றுவிடுங்கள். அலட்சியம் வேண்டாம்.

—  பேராசிரியர் சா.அருள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.