தொடரும் காவல் மரணங்கள் ! தீர்வுதான் என்ன?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

முந்தைய தி.மு.க. அரசுக்கு எதிராக, த.வெ.க.வினர் முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கட்டற்ற போதைப் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதுதான். ஆனால், த.வெ.க. ஆட்சியில் அமர்ந்த இரண்டு மாதங்களில், முந்தைய ஆட்சிக்கு எதிராக முன்வைத்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரம் முன்பைக்காட்டிலும், கூடியிருக்கிறதேயொழிய குறைந்தபாடில்லை. இந்நிலையில்தான், தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள 4 காவல் மரணங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

கன்யாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்த சபரிவர்மன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தனது கடையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஜூலை-09 அன்று கைது செய்யப்பட்டார். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர், சிறையில் வழுக்கி விழுந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சொல்லப்பட்டது. மாற்றுத்திறனாளியான சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் அம்பலமானது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெறும் 24 வயதேயான அருணாசலம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் வலிப்பு வந்து மயங்கி விழுந்ததாக குறிப்பிட்டு உடனடியாக பிணை வழங்கப்பட்டு பெற்றோர்களின் பொறுப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் தன்னை தாக்கியதாக அருணாசலம் சிகிச்சையின்போது வழங்கிய வாக்குமூலம் பதற்றத்தை பற்ற வைத்தது. பதிலுக்கு போலீசார், சிறையில் தானாக மயங்கி கீழே விழுவது போன்ற வீடியோவை தமக்கு சாதகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதற்கு முன்னர், கடந்த ஜூன் மாதத்தில் சென்னையை சேர்ந்த ஓட்டுநர் வெங்கடேசன் (28), காவல்துறையினரின் விசாரணைக்குப்பிறகு வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தார். காவல்துறையினரின் தாக்குதலால்தான் மகன் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றச்சாட்டுகிறார்கள்.

கடந்த ஜூலை -15 அன்று சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதியாக காவலில் வைக்கப்பட்டிருந்த பி.பாலாஜி, சிறையிலேயே உயிரிழந்திருக்கிறார்.

அஜித்குமார்
அஜித்குமார்

அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார் என ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்ற கதையாக கொட்டடி கொலைகள் தொடர்வதை என்னவென்று சொல்வது? பொதுவில் தண்டனையை கடுமையாக்கினால் குற்றங்கள் குறையும் என்பதாக சொல்லப்படும் நிலையில், அதுவும் சாத்தான்குளம் கொட்டடி கொலை வழக்கில், 9 போலீசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வெளியான நிலையிலும் காவல் மரணங்கள் தொடர்வதை எப்படி புரிந்து கொள்வது?

குற்றம் நிரூபிக்கப்படும் வரையில், எவர் ஒருவரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்தான். ஒருவேளை குற்றவாளியாகவே இருந்தாலும், தீர்ப்புக்கு முன்னரே தண்டனை வழங்கும் அதிகாரத்தை போலீசாருக்கு யார் வழங்கியது? அதுவும் உச்சபட்ச தண்டனையான மரணதண்டனையை?

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.