சுந்தரி அக்கா ! மெரினா மீன் குழம்பு வாசம் – குக் வித் கோமாளி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் 4ஆம் தேதி முதல் தொடங்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுந்தரி அக்காவும் குக்காக கலந்து கொள்கிறார். இது குறித்து ப்ரோமோவில் தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஷோவை வெங்கடேஷ் பட்டும் தாமுவும் நடுவர்களாக இருந்து நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு என்டமால் நிறுவனம் விஜய் டிவியை விட்டு விலகியது.

Sri Kumaran Mini HAll Trichy

இதனால் அந்த நிறுவனத்தால் இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு வரப்பட்ட வெங்கடேஷ் பட்டும் விலகினார். அவர் சன் டிவியில் டாப் குக்கு டூப்பு குக்கு எனும் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜன் கலந்து கொண்டு நடத்தினார்.

குக் வித் கோமாளி சீசன் 6:

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி வரும் மே 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இது போன்று ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே யாரெல்லாம் போட்டியாளர்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

போட்டியாளர்கள் யார்:

அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கும் உண்டு. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோமாளிகளாக கலந்து கொள்ள போகும் புகழும், குரேஷியும் போட்டியாளர்கள் குறித்த தகவலை தெரிவித்தனர். அதில் லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா, பிரியா ராமன், உமர் லத்தீப் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.

குக் வித் கோமாளி சீசன் 6
குக் வித் கோமாளி சீசன் 6

ப்ரோமா:

Flats in Trichy for Sale

இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது. அதில் பிக்பாஸ் சவுந்தர்யா, தங்கதுரை, ராமர், புகழ், குரேஷி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அது போல் போட்டியாளர்களாக லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியா ராமன், தேனடை மதுமிதா, கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா, செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, தொகுப்பாளர் ராஜு ஜெயமோகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

லட்சுமி ராமகிருஷ்ணன்:

இந்த நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணனும் ராமரும் கலந்து கொள்வது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் பொய் எனும் கான்செப்ட்டை உருவாக்கி, லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லும் “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்ற டயலாக்கை ராமர் சொல்லி வந்தார்.

விஜய் டிவியுடன் தகராறு:

இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய் டிவிக்கும் ராமருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யார் இந்த சுந்தரி அக்கா:

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கானாவூர் உணவகம் (எஸ். சுந்தரி அக்கா கடை) செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த விலையில் சுவையான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. மதிய உணவில் மீன், சிக்கன், மட்டன், இறால், கனவாய், நண்டு உள்ளிட்டவை இருக்கும்.

சுந்தரி அக்கா உணவு கடை:

சுந்தரி அக்கா கடையில் உணவு சுவையாகவும் தரமாகவும் இருப்பதாக அங்கு சாப்பிடுவோர் சொல்கிறார்கள். இவர் காசிமேட்டுக்கு சென்று ஹோட்டலுக்கு தேவையான அனைத்தையும் ஃபிரஷ்ஷாக வாங்கி வந்து சமைக்கிறார். இவரது கடையில் ரஜினி, சிம்பு உள்ளிட்ட பிரபலங்களும் மீன் குழம்பை வாங்கிச் சென்று சாப்பிட்டுள்ளதாக சுந்தரி அக்கா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.