மதுரை விமான நிலையத்தில் நாளை முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பம்
மதுரை விமான நிலையத்தில் நாளை முதல் கொரோனா பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பம்
புதிய வகை கொரோனா தொற்றான எக்ஸ்பிபி எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத் துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரையின்படி மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை முதல் செயல்படுத்தப்படும்
விமான நிலைய உள் வளாகத்திற்குள் வருபவர்களுக்கு 2 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அல்லது கொரான இல்லை என சான்று வைத்திருக்கவேண்டும். முக்கியமாக முக கவசம் கண்டிப்பாக அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூர் ,இலங்கை, துபாய், சார்ஜாவில் இருந்து விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பயணிகள் மதுரை வருகின்றனர்தற்போதுள்ள சூழ்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் எக்ஸ்பிபி எனப்படும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை மீண்டும் நாளை முதல் தொடங்கும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளதுஅதன்படி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% சத அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இதில் வரும் நோய்களுக்கு பாசிட்டிவ் என தெரிந்தால் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் முகவரியில் உள்ள மாவட்டங்களுக்கு தகவல் அனுப்பி அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் என கூறப்படுகிறதுதற்போது விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளுக்கு இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அல்லது கொரோனா இல்லை என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.