உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் இலங்கை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தியஉலகத் தமிழ் இலக்கிய விழாவின் தொடக்க விழா

0

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் இலங்கை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தியஉலகத் தமிழ் இலக்கிய விழாவின் தொடக்க விழா

 

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் இலங்கை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தியஉலகத் தமிழ் இலக்கிய விழாவின் தொடக்க விழா உலகத் தமிழ்ச் சங்கக் கலையரங்கில் நடைபெற்றதுஇந்நிகழ்வில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் முனைவர் சோமசுந்தரி வரவேற்புரையாற்றினார்உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் அன்புச்செழியன் தொடக்கவுரையாற்றினார்இந்நிகழ்வில் இலங்கை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் சண்முகதாஸ் தலைமையுரையாற்றினார்அவர் தம் உரையில்2500 ஆண்டுகளுக்கு முன்பே சங்க மரபுசங்கம் என்ற சொல் வந்தது 15ஆம் நூற்றாண்டில் இலங்கையில் ஒரு தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது. அப்போது இலங்கையின் மன்னராக அரசகேசரி விளங்கினார்2012ஆம் ஆண்டு மீள் கட்டுமானம் செய்யப்பட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டது. சங்கப்பேழையில் சங்கம் பற்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது. மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது பொருத்தமான விடயமாகும்என்று குறிப்பிட்டார்

சென்னை உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழத்தின் இயக்குநர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் மையநோக்குரை வழங்கினார். அவர் தம் உரையில் இலங்கைத் தமிழர்கள் உலகமெங்கும் பரவியுள்ளனர். எங்கு இருந்தாலும் கோலோச்சக்கூடிய திறமைபெற்றவர்கள் இலங்கைத் தமிழர்கள். உலகம் முழுவதும் தமிழை அறிமுகப்படுத்தியவர்கள் இலங்கைத் தமிழர்கள். இவர்களின் மொழி ஆழம், அறிவுக்கூர்மை. மொழிப்புலமை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்” என்று குறிப்பிட்டார்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.