ஊடக அறம் ! மன்னிப்பு கேட்ட நியூஸ் 7 நெறியாளர்  சுகிதா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தொலைக்காட்சி ஊடகத்தில் மன்னிப்பு கேட்ட நியூஸ் 7 நெறியாளர்  சுகிதா

 

நியூஸ் 7 தொலைக்காட்சியில் 20.12.22ஆம் நாள் இரவு 7.00 மணிக்கு “இராகுல் காந்தி இந்தி எதிர்ப்பைக் கையில் எடுக்கிறாரா? என்னும் தலைப்பில் கேள்வி நேரம் என்னும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை நியூஸ் 7 தொலைக்காட்சியின் பொறுப்பாசிரியர் சுகிதா நெறியாள்கை செய்து கொண்டிருந்தார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இந் நிகழ்வில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊடகத் தொடர்பாளர் ஹசீனா சையது கலந்துகொண்டார். நெறியாளர் சுகிதா அவர்கள் ஹசீனாவிடம், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தில் இராஜஸ்தானில் பேசும்போது, உலக நாடுகளோடு தொடர்பு கொள்ள வட நாட்டு மக்கள் ஆங்கிலம் கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அப்படியானால் இராகுல் காந்தி இந்தியைப் புறக்கணிக்கவேண்டும் என்று கூறுகிறாரா? என்று வினாவை முன்வைத்தார்.

நெறியாளர்  சுகிதா
நெறியாளர்  சுகிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

பதில் பேசிய ஹசீனா,“ உங்கள் கேள்வியே முதலில் தவறு. இராகுல் காந்தி உலக நாடுகளோடு குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளோடு நம் உறவு கொள்ளவேண்டும், அங்குப் பணியாற்ற வேண்டும் என்றால் வடநாட்டு மக்கள் ஆங்கிலம் பேசவேண்டும் என்று கூறினார் என்பது உண்மைதான். ஆனால் எங்கேயும் இந்தி படிக்கக்கூடாது என்றும், தாய்மொழியில் கல்வி கற்கக்கூடாது என்பதை வலியுறுத்தவில்லை. தாய்மொழியில்தான் கல்வியைக் கற்க வேண்டும் என்பதை ஏன் மறைத்துவிட்டு, இராகுல் இந்தி எதிர்ப்பைக் கையிலெடுக்கிறார் என்று கூறுவது என்ன ஊடக அறம்? வடநாட்டு ஊடகங்களில் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டு ஊடகங்களில் உண்மை செய்திகளை மறைத்து, நீங்களாக நினைத்துக்கொள்ளும் செய்தியின் அடிப்படையில் விவாதத்தை எப்படி நடத்துகின்றீர்கள்?” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனைத் தொடர்ந்து பேசிய நெறியாளர் சுகிதா, “நான் உங்களிடம் பதில் பெறவே கேள்வி கேட்டேன். நான் எதையும் மறைக்கவில்லை. இராகுல்காந்தி இந்தி எதிர்ப்பைக் கையில் எடுக்கிறாரா? காங்கிரஸ் கட்சி ஆதரிக்கின்றதா? ” என்று மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாகச் சுகிதா கேள்வியை ஹசீனாவை நோக்கி முன்வைத்தார். மேலும், “நெறியாளராகிய எனக்கு நீங்கள் உள்நோக்கம் கற்பிக்கின்றீர்கள். நான் உண்மையை மறைத்துப் பேசுகிறேன் என்ற நீங்கள் சொன்னதைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

நெறியாளர்  சுகிதா
நெறியாளர்  சுகிதா

கோபம் கொண்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஹசீனா,“இராகுல்காந்தி தாய்மொழியில் கல்வி பயிலவேண்டும் என்றும் உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் படியுங்கள் என்பதில் எங்கே இந்தி எதிர்ப்பு இருக்கிறது” என்று மறுபடியும் கொந்தளித்தார். தன் நெறியாள்கையில் ஏற்பட்ட தவறை உணர்ந்த சுகிதா ,“எனக்கு நீங்கள் உள்நோக்கம் கற்பித்ததைத் திரும்பப் பெறவேண்டாம். நான் உங்களிடம் கூறியதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். நான் பாவம். நான் உங்களிடம் பதிலைப் பெற முயன்றேன். நீங்கள் என்னிடம் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள். நான் அடுத்தவரிடம் செல்கிறேன் என்று ஹசீனாவின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹசீனா நெறியாளர் சுகிதாவை விட்டுவிடாமல் நீங்கள் உண்மையை மறைக்கின்றீர்கள் என்று துணிவுடன் பேசித் தொலைக்காட்சி பார்த்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். தமிழ்நாட்டு ஊடகங்கள் குறிப்பாகத் தொலைக்காட்சி உண்மையை உலகத்திற்குச் சொல்லி ஊடக அறத்தைப் போற்றவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

-ஆதவன்

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.