செக்கானூரணி அருகே கி.பி.9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

செக்கானூரணி அருகே கி.பி.9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

Flats in Trichy for Sale

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே ஊரணி கரையில் 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி அஸ்வத்தாமன் ஆய்வாளர் அனந்த குமரன் பன்னியான் மலை கணவாய் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கி பி 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது.

Sri Kumaran Mini HAll Trichy

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது
பழங்காலத்தில் தமிழர்களின் வழிபாட்டுமுறை இயற்கை அடிப்படையாகக் கொண்டவைஅதன்பிறகு,பஞ்ச பூதங்கள் மற்றும் மரங்கள் ஆகியவை வழிபடு பொருட்களாகப் பாவிக்கப்பட்டனஇதன் தொடர்ச்சியாக வளமையின் குறியீடாகப் பெண்ணை வழிபடும் மரபு தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாக இடம்பெற்றதுகொற்றவைப் பற்றி தமிழகத்தின் மிகப் பழமையான பெண் தெய்வமாக தொல்காப்பியத்திலும் இலக்கியங்களிலும் பழையோள் காணாமற் செல்வி என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும் கொற்றவையின் உருவ அமைப்பையும் வழிபாட்டு முறையையும் விவரிப்பது சிலப்பதிகார காப்பியமேயாகும்
கொற்றவை சிற்பம்
செக்கனூரணியில் இருந்து மேலக்கால் செல்லும் சாலையில் கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே ஊரணி கரையில் புதைந்த நிலையில் கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது. இச்சிற்பம் 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் நாண்கு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறாள் கொற்றவை. தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க, வட்ட வடிவிலானை முகம் தேய்மானத்தோடு காணப்படுகின்றன.இரு காதுகளில் பத்ர குண்டலங்கள் கழுத்தில் ஆரம் போன்ற அணிகலன், கைகளில் கைவளைகள் அனிந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறாள். கீழ் பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது. தன் கரங்களில் பிரயோகச் சக்கரம், சங்கு, ஏந்தியயும் வலது கரத்தில் அபய முத்திரையும் செதுக்கப்பட்டுள்ளதுஆரம்ப காலத்தில் மிக பிரமாண்டமாக எட்டு கைகளுடன் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட கொற்றவை காலப்போக்கில்
நான்கு கைகயோடு எளிமையான முறையில் செதுக்கப்பட்டுள்ளதுநாண்கு கைககள் கொண்ட இருப்பதால் சதுர் புஜ துர்க்கை என்று அழைக்கப்படுகின்றது. விருதுநகர் மாவட்டம் பள்ளிமடத்தில் இச்சிற்பத்தை போன்ற கொற்றவை சிற்பம் உள்ளது. அந்த சிற்பம் இரண்டாம் வரகுண பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தவை கொற்றவை உருவமைதி பொறுத்து கி.பி 9ம் நூற்றாண்டில் பிற்காலத்தில் முற்கால பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தாக இருக்கும் என்றார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.