மாநகராட்சி நிர்வாகமே, ஆக்கிரமிப்பு செய்யலாமா ? எழுந்த எதிர்ப்பு !
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 54-ல் முக்கிய பகுதியான ஹாஜிமார் தெரு பகுதியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஏழை எளிய மக்களுக்காக இயங்கிவரும் கல்வி நிலையம் தான் ஹாஜிதாஜுதீன் ஐடிஐ. இதன் அருகில் உள்ள காலி இடத்தில் ஹாஜிமார் தெருவில் உள்ள பெண்கள் ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைக்காக பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும், விசேஷ காலத் தொழுகையும் அங்கு நடப்பது வழக்கமாக உள்ளது.
அந்த இடத்தில் தற்போது மாமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டி இடையூறு ஏற்படுத்தி அபகரிக்க சிலர் நினைக்கிறார்கள். இதற்கு ஒட்டுமொத்த ஹாஜிமார்த் தெருவில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்தும் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகம் அமைப்பதை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.