அங்குசம் சேனலில் இணைய

பட்டாவுக்கு 12 ஆயிரம்!  லஞ்ச அதிகாரிகளை வேட்டையாடிய  போலீஸ்….! 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நில அளவீடு செய்யவும் ,  மின்கம்பத்தை மாற்றி அமைக்கவும் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை  லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த இனகபீரனபள்ளியை சேர்ந்தவர் கதிரப்பா தனது விவசாய நிலத்தில் கோழி பண்ணை அமைத்து, தொழில் தொடங்க முடிவு செய்து . நிலத்தின் நடு பகுதியிலுள்ள மின் கம்பத்தை  இடமாற்றம் செய்ய ஆன்லைனில், 2,145 ரூபாய் அரசுக்கு செலுத்தி, ரசீதோடு கோரிக்கை மனுவை தமிழ்நாடு மின் பகிர்மான கழக, அத்திமுகம் உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஆனால், மின்கம்பத்தை மாற்றிஅமைக்க,  15,000 ரூபாய் லஞ்சமாக அத்திமுகம் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) உதயகுமார் கேட்டு முரண்டு பிடித்துள்ளார்.

ஷாக் ஆன கதிரப்பா,  கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார் அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரவி  ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய, 15,000 ரூபாயை,  கொடுத்து அனுப்பி வைத்தார் . வாங்கிக்கொண்டு நேராக அத்திமுகம் மின்பகர்மன அலுவலகத்திற்கு சென்று லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர் உதயகுமாரிடம் நேற்று மாலை  கொடுத்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மின்வாரிய அதிகாரி உதயக்குமார்
மின்வாரிய அதிகாரி உதயக்குமார்

அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன்  இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ மஞ்சுநாதன் மற்றும் போலீசார், உதயகுமாரை கையும் கழுவுமாக பிடித்து கைது செய்தனர்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

அதேபோல் , தர்மபுரி மாவட்டம்,  கடத்துார் அடுத்த மணியம்பாடி, ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளையராஜா,  தன் தந்தை பெயரில் உள்ள நிலத்தை, தனக்கும் தனது சகோதரிகள் பெயரிலும் பத்திரப்பதிவு செய்து அதற்கு,

தனி பட்டா வேண்டி, இணையதளம் மூலமாக பாப்பிரெட்டிப்பட்டி நில அளவை துறைக்கு விண்ணப்பத்திருந்தார் , அதன்பேரில் இளையராஜாவை தொடர்பு கொண்ட மணியம்பாடி  சர்வேயர் விஜயகுமார், 12,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

சர்வேயர் விஜயக்குமார்
சர்வேயர் விஜயக்குமார்

லஞ்ச கொடுக்க விரும்பாத இளையராஜா, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை இளையராஜவிடம் கொடுத்து அனுப்பி பின் தொடர்ந்தனர் , சர்வேயர் விஜயக்குமாரை தொடர்பு கொண்ட இளையராஜா மணியம்பாடி அருகேயுள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வருமாறு  அழைத்துள்ளார், அங்கு வந்த சர்வேயர் விஜயக்குமாரிடம் ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை வாங்கும்போது சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்

நேற்று ஒரே நாளில்  கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி போன்ற பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்கள் பொறி வைத்து நடத்திய  வேட்டையில்  அதிகாரிகள் சிக்கியுள்ளனர்,  இதனால் லஞ்சம் பெறும் அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

—    மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.