“உட்கார்ந்து பேச சீட் கொடுங்கப்பா..”மேயரிடம் முறையிட்ட மாமன்ற உறுப்பினர்!
“உட்கார்ந்து பேச சீட் கொடுங்கப்பா..”மேயரிடம் முறையிட்ட மாமன்ற உறுப்பினர்!
திருச்சி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் களுக்கென்று தனி இருக்கைகள் ஒதுக்கப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டி, அரசியல் கட்சி பிரதிநிதித்துவ அடிப்படையில் இருக்கை ஒதுக்குமாறு மேயர் மற்றும் ஆணையரிடம் முறையிட்டிருக்கிறார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 47-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன்.
” மாநகராட்சி தேர்தல் முடிந்து ஓராண்டுகள் ஆகியும் இன்னும் கட்சி வாரியாக இருக்கை ஒதுக்காததால், மாமன்ற உறுப்பினர்கள் கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு செயல்படுவது நமது மாமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளதாக” அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். திருச்சியில் என்றில்லை, தமிழகம் முழுவதுமே நகராட்சிகள், மாநகராட்சிகளில் கட்சி ரீதியாக இருக்கைகள் ஒதுக்கப்படாமல்தான் இருப்பதாக சொல்கிறார்கள்