200 ரூபாய் கள்ள நோட்டுகள் கடத்தல் ! வாகனத்தை கைப்பற்றிய காவல்துறை !
திருச்சிராப்பள்ளி மாவட்டம். துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா வளைவு அருகே உள்ள டிஆர்பி பெட்ரோல் பங்கிற்கு 20.012026 அன்று இரவு 1230 மணிக்கு காரில் பயணித்த இரண்டு நபர்கள் பெட்ரோல் நிரப்ப வந்தனர். பெட்ரோல் நிரப்பிய பிறகு, கள்ள நோட்டுகளை செலுத்திவிட்டு இரண்டு நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக துவாக்குடி காவல் நிலையத்திற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் மஞ்சத்திடல் சோதனைச் சாவடியில் தஞ்சை திருச்சி சாலையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த MH 44 Z-2383 என்ற பதிவென் கொண்ட Renault Kwid காரை நிறுத்தி காரிலிருந்த 1. ரமேஷ்பாபு பாங்கி (54), த.பெ. பாபுபிரபு பாங்கி, சிவாஜி நகர், காய்ஜ் பீடு, மகாராஷ்ட்ரா, 2. நாராயண்ராம் (33), த.பெ அனுமான்ராம், மயாங்கிரி, அல்லாகம் காம்ப்ளக்ஸ் கமல்கேஜ். பீடு மகாராஷ்ட்ரா, என்பவர்களை விசாரணை செய்த போது. முன்னுக்குபின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த காவலர்கள் காரின் பின்பக்க பகுதியை சோதனை செய்தபோது, 200 ரூபாய் நோட்டு கட்டுகள் இரண்டு பைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நோட்டுகளின் தன்மை வித்தியாசமாகவும் சில நோட்டுகளின் சீரியல் எண் ஒரே மாதிரியாகவும் இருந்ததால். கள்ள நோட்டுகள் என உறுதி செய்யப்பட்டு, மேற்படி நபர்கள் வாகனத்துடன் நிலையம் அழைத்து வரப்பட்டு, மேற்படி நபர்கள் மீது திருவெறும்பூர் காவல் நிலைய குற்ற எண் 28/26, u/s 179, 180 ன் படி 21.0126 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளை 48 மணி நேரத்திற்குள் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி அறிக்கை பெறவும். எதிரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு கள்ளநோட்டுகள் தயாரிக்க பயன்படும் இயந்திரங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை கண்டறியவும் விசாரணை அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் தொடர்புடைய அனைத்து எதிரிகளையும் கைது செய்யவும், எதிரிகளை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப உத்தரவிட்டுள்ளார் என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேற்படி வாகனசோதனையின் போது கள்ளநோட்டுகளை கைப்பற்றிய திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப வெகுவாக பாராட்டியுள்ளார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.