இயக்குநர் கௌதமனுக்கு பிடி வாரண்ட்
இயக்குநர் கௌதமனுக்கு
பிடி வாரண்ட்
நீட் தேர்வு எதிர்ப்பு போராட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த திரைப்பட இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பள்ளி இறுதித் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனதால் மனமுடைந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி தற்கொலை செய்து இறந்தார்.
அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து இறந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய இயக்குநர் கௌதமன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இவ்வழக்கு விசாரணை அரியலூர் மாவட்டம் செந்துறை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ் வழக்கில் கௌதமன் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போதும் கௌதமன் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.