விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உடல் சிதறி பலி !! 2 பேர் படுகாயம் ஆலை போர்மேன் கைது
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உடல் சிதறி பலி !!! 2 பேர் படுகாயம் ஆலை போர்மேன் கைது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி மாயதேவன்பட்டி என்ற கிராமத்தில் சிவகாசி பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், என்பவருக்கு சொந்தமான ஜெயந்தி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இங்கு உள்ளது.
இந்த ஆலையை சிவகாசி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இந்த ஆலை நாக்பூர் உரிமம் பெற்று 40 க்கும் மேற்பட்ட அறைகள் 60 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் உள்ளனர், இன்று (ஆக 14 ) காலை 10 மணி அளவில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசு உற்பத்திக்கு தேவையான சல்பேட் என்ற மூலப்பொருள்களை கொள்முதல் செய்து வந்த வாகனம் பட்டாசு ஆலையில் உள்ள மூலப்பொருள் இருப்பு வைக்கும் அறைகளில் இறக்கும் பொழுது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்துக்குள்ளாகி அறை முழுவதும் தரைமட்டம் ஆனது.
இந்த விபத்தில் நாகபாளையத்தைச் சேர்ந்த புலிக்குட்டி ,(65) மற்றும் குன்னூரை சேர்ந்த கார்த்திக் ஈஸ்வரன்,(35) ஆகிய இரு தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
உடனடியாக தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த போஸ், (35) மணிகண்டன், (31) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உடல் சிதறி பலியான இரு தொழிலாளர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.
இதை தீயணைப்பு துறையினர், சேகரித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக மல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போர் மேன் பாலமுருகனை கைது செய்தனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தை சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த விபத்து தொடர்பாக இரங்கல் செய்தி வெளியிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விபத்தில் உயிரிழந்த 2 நபர்களுக்கு தல 3 லட்சமும் காயம் அடைந்த 2 நபர்களுக்கு தல 50 ஆயிரம் தமிழ்நாடு அரசு நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
-மாரீஸ்வரன்