பட்டாசு கடை நடத்திய போலீசார் ! ஐ.ஜி. எடுத்த அதிரடி !
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் சில போலீஸார் தங்களது பணி ஒழுங்கை மீறி பட்டாசு கடைகள் நடத்தி வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில், சில போலீஸார் மீது குற்றச்சாட்டு உறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட எட்டு போலீஸாரை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய தென் மண்டல காவல் துறை ஆய்வாளர் பொது (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, விருதுநகர் ஆயுதப்படையில் பணிபுரிந்த சீனிவாசன், கட்டனூர் காவல் நிலைய தலைமை காவலர் தங்கமுத்து, சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவலர் பழனியப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய தலைமை காவலர் முருகேசன், சாத்தூர் நகர் காவல் நிலைய தலைமை காவலர் சக்திவேல் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய தலைமை காவலர் முத்து மாரியப்பன், சாத்தூர் நகர் காவல் நிலைய காவலர் அயோத்தி ராமச்சந்திரன், விருதுநகர் ஊரக காவல் நிலைய காவலர் உதயகுமார் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை போலீசார் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.