பட்டாசு கடை நடத்திய போலீசார் ! ஐ.ஜி. எடுத்த அதிரடி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் சில போலீஸார் தங்களது பணி ஒழுங்கை மீறி பட்டாசு கடைகள் நடத்தி வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில், சில போலீஸார் மீது குற்றச்சாட்டு உறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணன்
கண்ணன்

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட எட்டு போலீஸாரை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய தென் மண்டல காவல் துறை ஆய்வாளர் பொது (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஐ.ஜி. எடுத்த அதிரடி அதன்படி, விருதுநகர் ஆயுதப்படையில் பணிபுரிந்த சீனிவாசன், கட்டனூர் காவல் நிலைய தலைமை காவலர் தங்கமுத்து, சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவலர் பழனியப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய தலைமை காவலர் முருகேசன், சாத்தூர் நகர் காவல் நிலைய தலைமை காவலர் சக்திவேல் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ஐ.ஜி. எடுத்த அதிரடி மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய தலைமை காவலர் முத்து மாரியப்பன், சாத்தூர் நகர் காவல் நிலைய காவலர் அயோத்தி ராமச்சந்திரன், விருதுநகர் ஊரக காவல் நிலைய காவலர் உதயகுமார் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை போலீசார் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

 

 —   மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.