திமுக கூட்டணியும்-ஊரக உள்ளாட்சி தேர்தலால் ஏற்பட்ட விரிசலும்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

செப்டம்பர் 22 நேற்றோடு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து. இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அதிமுக கூட்டணியில் மட்டும் விளைவை ஏற்படுத்தவில்லை திமுக கூட்டணியிலும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.

9 மாவட்ட கள அரசியலை பார்க்கும் பொழுது திமுக அனைத்து மாவட்டங்களிலும் மிக அதிக இடங்களில் போட்டியிட முயற்சி எடுத்தது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தலைமை கூட்டணியோடு அனுசரித்து போக செல்ல கூறியும், மாவட்ட செயலாளர்களும், மாவட்ட தலைமையும் ஆட்சிப் பொறுப்புக்கு இப்பொழுது தான் வந்திருக்கிறோம். தொண்டர்கள் தற்போது மிக உற்சாகமாக இருக்கின்றனர், இந்த நேரத்தில் அனைவரும் சீட்டு கேட்கின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அவர்களை விட்டுவிட்டு கூட்டணிக்கு சீட்டு கொடுத்தால் கட்சியில் விரிசல் ஏற்பட்டுவிடும் என்று மாவட்டத் தலைமை கட்சி தலைமைக்கு தூதுவிட்டு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாவட்ட நிர்வாகிகள் மேற்கொள்ளத் தொடங்கினர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

செப்டம்பர் 17 வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய அன்று முதல் 9 மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளுடன் விரு விரு பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. இப்படி ஒவ்வொரு மாவட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவுகள் கூட்டணியின் பிளவை உறுதி செய்தன.

காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளதால் காங்கிரஸ் கட்சி இந்த மூன்று மாவட்டங்களிலும் குறைந்தது 20 சதவீத இடங்களையாவது பெற்றுவிட வேண்டுமென்று முயற்சித்தது, மேலும் மற்ற மாவட்டங்களில் குறைந்தது 15 சதவீத இடங்களை யாவது பெற்று விட வேண்டும் என்று காங்கிரஸ் முயற்சி எடுத்தது. ஆனால் இதற்கு திமுக சிறிதும் ஒப்புக் கொள்ளவில்லை,
திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட இடங்களையும் திமுக சரியாக ஒதுக்கவில்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதே நிலைதான். விடுதலை சிறுத்தை சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டாகவும் என்று மாவட்டத்திற்குள் ஒன்றியங்களும், ஊராட்சிகளும், என்று அந்தந்தப் பகுதிகளே கூட்டணியில் போட்டியிடுவதா, தனித்துப் போட்டியிடுவதா என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டது.
ஏனைய அரசியல் கட்சிகளும் ஒற்றை இலக்கத்தில் சீட்டுகளை பெற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் போட்டியிடுகின்றன. சில கட்சிகளுக்கு அந்த ஒரு சில சீட்டுகள் கூட கிடைக்கவில்லை. இப்படி திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளுமே தற்போது விரிசலுக்கு உட்பட்டு விட்டன.

இவ்வாறு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட கூடிய 2901 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், 22581 பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கான பதவிக்கும் மேலும் கட்சி சின்னத்தில் போட்டியிட கூடிய 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 1381 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கும் மற்றும் மறைமுகமாக தேர்தல் நடக்கக்கூடிய 74 ஊராட்சி யூனியன் தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் பதவிக்கும் என்று மொத்த இடங்களில் பெரும்பான்மையான இடங்களில் திமுகவே போட்டியிட விரும்புவதால் தற்போது திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே மாவட்டத்துக்குள் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.