அலைக்கழிக்கப்படும் சிறைக்காவலர்கள்-ஈகோ பிரச்சனையில் பணியாளர்கள் படும் பாடு!

0

கூடுதல் காவல்துறை இயக்குனர், மற்றும் சிறைத்துறைத் தலைவர் குறிப்பாணை படி பூந்தமல்லி தனிக்கிளைச்சிறை பணிக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து சிறைப்பணியாளர்கள் மாற்றுபணிக்கு அனுப்பப்பட்டனர்.

இதில் இரண்டு வகை. ஒருவகை 7 நாட்கள், மற்றொரு வகை 15 நாட்கள். இதில் விஷேசம் என்னவெனில் அதிகாரிகளுக்கு எடுபிடியாக அவர்கள் கூறும் பணியை செய்யக்கூடிய நபர்கள் மாற்றுபணிக்கு அனுப்பப்படுவது இல்லை என்றும், உண்மையாகவும் நேர்மையாகவும் வேலை செய்ய வேண்டும் என்று கருதக்கூடிய நபர்கள் மற்றும் ஏற்கனவே மாற்றுபணி செய்தவர்கள் மீண்டும் மீண்டும் மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுவதாகவும், இதில் மேலும் அவர்களுக்கு சரியான பயணப்படி கூட வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

2 dhanalakshmi joseph

இது குறித்து சிறைத்துறை பணியாளர் வட்டாரங்கள் கூறுவது, சென்னை மாநகர எல்லையில் இருந்து 35 கி.மீ தூரம்வரை சென்று தங்கள் பணிகளை காவலர்கள் மேற்கொள்கின்றனர் இதனால் இவர்களுக்கு இரண்டு மடங்கு பயணப்படி செலவாகிறது. இப்படி நியாயமான பயணப்படி பெறுவதற்கு கூட அமைச்சு பணியாளர்களை கவனித்தால் மட்டும் தான் சரியான பயணப்படியாம், மறுத்தால் பாதி பயணப்படிதானாம். இதற்கு ஆதாரம் சேலம் மத்திய சிறை, கோவை மத்திய சிறை பயணப்படி பட்டியல் என்று குறிப்பிடுகின்றனர்.

4 bismi svs

இது மட்டுமல்லாது கொரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்த போதும், போக்குவரத்து இல்லாத போதும் மாற்றுபணிக்கு சிறைக்காவலர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் ஆயிரகணக்கில் செலவு செய்து லாரி அல்லது சொந்த இருசக்கர வாகணம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து புழல் மத்திய சிறை ஒன்றில் வருகையை பதிவுசெய்து, பின் பூந்தமல்லி கிளைச்சிறையில் பணிக்கு ஆஜராகி மாற்றுகாவலரை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் இப்படி காவலர்கள் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

இதோடு முடிந்ததா என்றால் இன்னும் தொடர்கிறது அவர்களுடைய வேதனை பட்டியல், தமிழகம் முழுவதிலுமிருந்து வரும் பணியாளர்களுக்கு கழிவறை செல்ல வசதியில்லையாம், குளிக்க வசதியில்லையாம், ஓய்வெடுக்க அறை இல்லையாம், மேலும் உணவுக்கு கூட வசதியில்லையாம். ஆனால் பணிக்கு கட்டாயம் வர வேண்டுமாம்.

இதற்கு முக்கிய காரணம் அதிகாரிகளுக்கு வேண்டப்படாத பணியானர்களை பந்தாடுவதற்கென்றே இந்த நடைமுறை என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட சிறைகளில் நிரந்தர அதிகாரிகள் சிலரும் உண்டு‌. ஆனால் அவர்கள் இரவுப்பணிக்கு செய்யமாட்டார்கள். இவ்வாறு பூந்தமல்லி கிளைச்சிறைக்கு என நிரந்தர பணியாளர்கள் இருக்கும் போது தவறான நடைமுறையை பின்பற்றுவது தேவையா என்று கேள்வி எழுப்புகின்றனர் ?

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.