அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அவங்க தொட்ட பந்துல நாங்க எப்படி பவுல் எண்ண முடியும் ? IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (17)

IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (17)

திருச்சியில் அடகு நகையை விற்க

“ஹைதராபாத்லேயே சன் ரைசர்ஸை சுருட்டித் தள்ளிட்டானுங்களே குஜராத் டைட்டன்ஸ்”

“ஐ.பி.எல்னா சி.எஸ்.கே, மும்பை இன்டியன்ஸ்னு ஜாம்பவான்கள் இருந்த காலம் இருந்திச்சி. இப்ப எல்லாம் தலைகீழா மாறிடிச்சி”

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“கப் அடிக்கப் போறது டைட்டன்ஸ்தானா?”

“கேமை எப்படி ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்கன்னு தெரியலையே?”

Admission Enquiry Form

15 ஆண்டுகளில் ஐ.பி.எல். டோர்ன்மென்ட்டில் இத்தனை ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்போது, 200 ஆண்டுகளுக்கு மேலான அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டிகளில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் அறிமுகப்படுத்திய கிரிக்கெட், இந்தியாவின் உயர்வர்க்கத்தின் விளையாட்டாகத் தொடங்கி, 200 ஆண்டுகளில் கிராமப் பகுதிவரை ஊடுருவிவிட்டது.

பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது குஜராத். அங்கே டைட்டன்களாக கிரிக்கெட்டில் அசத்தியவர்கள் பார்சிகள். இங்கிலாந்துக்குப் போய் அங்குள்ள அணிகளுடன் ஆடக்கூடிய அளவுக்கு பார்சிகளிடம் விளையாட்டுத் திறமையும் பொருளாதார வளமும் இருந்தது. சமஸ்தானத்தை ஆட்சி செய்த ராஜாக்களுக்கும் வெள்ளைக்காரர்களுடனான நட்புறவுக்கு கிரிக்கெட் வசதியாக இருந்ததால், இங்கிலீஷ் கிரிக்கெட் டீமுடன் அவர்கள் இணைந்திருந்தனர். நவநகர் ராஜா ஸ்ரீ ரஞ்சித்சின்ஜியின் பேட்டிங் வெள்ளைக்காரர்களை ஈர்த்தது. ஆனால், வெள்ளைக்காரர்களின் டீமுக்காக விளையாடுவதில் ரஞ்சித்தின்ஜிக்கு தயக்கம் இருந்தது.

ஐபிஎல் கிரிக்கெட்“நல்லா ஆடுறீங்க.. பேட்டிங் ஸ்டைல் அசத்தலா இருக்கு.. நீங்க ஏன் இங்கிலாந்து டீம்களில் ஆடக்கூடாது?” என்று கேட்ட வெள்ளைக்கார நண்பர்களிடம், “நான் இந்திய சமஸ்தானத்து ராஜா. அந்தப் பெருமையோடு விளையாட நினைக்கிறேன். இன்னொரு நாட்டின் அடையாளம் என் சமஸ்தானத்து பெருமையைக் குறைச்சிடும்” என்றார் ரஞ்சித்சின்ஜி.

“உங்க திறமை வீணாகிடக்கூடாது. கிரிக்கெட்டில் உங்க பெயர் எப்போதும் நிலைத்திருக்கணும்” என்று பிரிட்டிஷார் பேசிப்பார்த்தார்கள். ராஜா தன் நிலையில் உறுதியாகவே இருந்துவிட்டார். ஆனாலும், அவரது பெயர் இந்திய கிரிக்கெட்டில் இப்போதும் நிலைத்தே இருக்கிறது. இந்தியாவில் மாநில அணிகள் மற்றும் நிறுவனங்களின் அணிகளுக்கிடையே நடைபெறும் முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளான ரஞ்சி டிராபி கிரிக்கெட் என்பது நவநகர் ராஜாவான ரஞ்சித்சின்ஜியின் பெயரில் உள்ள டிராபிதான்.

பிரிட்டிஷ் இந்தியா சார்பில் ஒரு முதல் தரக் கிரிக்கெட் அணியை உருவாக்கி அதை இங்கிலாந்தில் கொண்டு போய் இறக்கி, “எங்களை நீங்க எந்த ஊருக்கு அனுப்புனீங்களோ, அங்கேயே ஒரு டீமை உருவாக்கி அதை நம்ம ஊருல வந்து இறக்கியிருக்கோம் பாரு” என்று காட்ட நினைத்தார்கள் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள். 1892 ல் உருவான அவர்களின் ஆசை நிறைவேற ஒரு மாமாங்கம் ஆனது.

இந்தியாவில் சுதந்திரக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்த நேரம். காங்கிரஸ் கட்சி உருவாகியிருந்தது. அதில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இருந்தனர். பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது இளைஞர்கள் கொலை காண்டுடன் இருந்ததால், கிரிக்கெட் கிரவுண்டு போன்ற இடங்களில் வெள்ளைக்கார அதிகாரிகள் நடமாடுவது குறைந்தது. இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த இந்திய இளைஞர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

கோவி.லெனின்
கோவி.லெனின்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

1907 முதல் 1909 வரை இரண்டாண்டுகள் கிரிக்கெட் அணி தொடர்பான முயற்சிகள் முடங்கியிருந்த நிலையில், மீண்டும் அந்த ஆசை அதிகாரிகளிடம் மட்டுமல்ல, ராஜ வம்சத்தினர், பணக்கார வணிகர்கள், சமூகத்தில் செல்வாக்குள்ளவர்களிடம் அதிகமானது. யாரை முன்னிறுத்தி இந்தியாவுக்கான கிரிக்கெட் டீமை அமைப்பது?

அவர்களின் தேடலில், திறமையுடன் ஆர்வமும் கொண்டவராகக் கண்ணில் பட்டவர் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங். கவசம், கேடயம் ஆகியவற்றுக்குப் பதிலாக க்ளவுஸ், லெக் பேட். வாளுக்குப் பதில் பேட். 19 வயதேயான பாட்டியாலா மகாராஜாவுக்கு நன்றாகத்தான் இருந்தது. சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர் கேப்டன் என்றதுமே மற்ற ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள்.

இந்தியாவுக்கான அணியில் பார்சிகள், இந்துக்கள், முஸ்லிம்கள் என மதம் சார்ந்த பிரதிநிதித்துவம் முன்னிறுத்தப்பட்டது. சப்டிடியூட்ஸ் உள்பட 15 பேர் கொண்ட டீம் ரெடியானது. ஆல் இந்தியா கிரிக்கெட் டீம் என்ற பெயருடன் இங்கிலாந்துக்குப் பயணமாக ஆயத்தமாகினர். அங்குள்ள பிட்ச்களில் விளையாடுவதற்கேற்ற பயிற்சிகளை பம்பாயில் மேற்கொண்டிருந்தனர்.

பிராக்டீஸ் மேட்ச்சின்போது கொஞ்சம் முணுமுணுப்பு கேட்டது. ஏன் என்று பிரிட்டிஷார் யோசித்தனர். “எந்த மதத்துக்காவது சரியான பிரதிநிதித்துவம் இல்லையா?”

“அதெல்லாம் இல்லை.. இந்து மதத்தைச் சேர்ந்த ப்ளேயர்ஸ்க்குள்ளேயே ஏதா பிரச்சினை.”

“அவங்களுக்குள்ளேயா? என்ன பிரச்சினை?”

“அவங்க தொட்ட பந்துல நாங்க எப்படி பவுல் எண்ண முடியும்னு கேட்குறாங்க.”

“யார் தொட்ட பந்து?”

“டீமில் இருக்கிற ரெண்டு பேரு.. அவங்க தீண்டத்தகாத ஜாதிக்காரங்களாம்”

(ஆட்டம் தொடரும்)

கோவி.லெனின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.