அங்குசம் சேனலில் இணைய

ஆசையைத் தூண்டுவது … சதுரங்க வேட்டைக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் வேட்டைக்கும் பொருந்தும் ! IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (9)

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாக்கர் எதிர்பார்த்தது போல ரசிகர்கள் கூட்டம் ஸ்டேடியத்தில் திரண்டதால், பகல் – இரவு மின்னொளி கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை அதிகமானது. தொடக்கத்தில் பேட்ஸ்மென் சிரமப்பட்டனர். பவுலர்கள் அசத்தினர். அதுவும் வெள்ளைப் பந்தில், பாக்கரின் வெஸ்ட் இன்டீஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் போட்ட பந்துகள் கெர்ரி பாக்கரின் மற்ற இரண்டு அணிகளைத் திணறடித்தது. அடுத்ததாக, அந்த இரண்டு அணியிலும் இருந்த ஃபாஸ்ட் பவுலர்களும் அதே திறமையைக் காட்டினர்.

ஆன்டி ராபர்ட்ஸ், டென்னிஸ் லில்லி, இம்ரான்கான் இவர்கள் மின்னொளியில் பந்து வீச வந்தால், அதை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் கூடுதல் எச்சரிக்கையாகி விடுவார். வோர்ல்ட் சீரிஸ் கிரிக்கெட்டின் சீசன் முடிவதற்குள் பகல் – இரவு ஆட்டத்திற்கு மூன்று அணியின் பேட்ஸ்மேன், பவுலர், விக்கெட் கீப்பர் என அனைவரும் தயாராகிவிட்டார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

IPLக்கு முன்பும் கிரிக்கெட்பாக்கர் நடத்தும் போட்டிகளைப் பார்க்க கூட்டம் சேர்கிறது எனத் தெரிந்ததும், தங்கள் நாட்டில் உள்ள கிரிக்கெட் போர்டுகளில் விளையாடிக் கொண்டிருந்த பல ஆட்டக்காரர்களுக்கும் பாக்கர் டீம் மீது பார்வை திரும்பியது. ஆசையைத் தூண்டுவது என்பது சதுரங்க வேட்டைக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் வேட்டைக்கும் பொருந்தும். கெர்ரி பாக்கரின் கூட்டாளிகள் ஒவ்வொரு நாட்டு ஆட்டக்காரர்களையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். இந்தியாவின் முதல் பெர்ஃபக்ட் ஆல்ரவுண்டரான கபில்தேவ் மீது அவர்களின் கண்கள் மீண்டும் மீண்டும் பதிந்து கொண்டிருந்தன.

“வோர்ல்ட் க்ளாஸ்ல பவுலிங் இருக்கு. ஆக்ஷனும் இருக்கு. ஹைட், வெயிட் எல்லாமே ஒரு ப்ளையேருக்குரிய தகுதியோடு இருக்கு”

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“பேச முயற்சி செய்தோம். செட் ஆகலை”

“வேற ரூட் இருக்கும் … பாருங்க. ஏதாவது நல்லதா நடக்கும்”

பாகிஸ்தானில் இந்தியா விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கபில், இந்தியாவில் காளிச்சரண் தலைமையிலான வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான 6 டெஸ்ட் மேட்ச் தொடரில் கவனம் பெற்றிருந்தார். பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக மாறியிருந்தார்.

IPLக்கு முன்பும் கிரிக்கெட்இந்திய அணியின் கேப்டனான கவாஸ்கர் பொறுப்பேற்று, 6 டெஸ்ட்களில் 4 செஞ்சுரிகளை அடித்திருந்தார். அதில் ஒன்று டபுள் செஞ்சுரி. அத்துடன் கபிலின் அதிரடி பேட்டிங்கும், ஆவேசமான பந்துவீச்சும் டெஸ்ட் தொடருக்கு பலம் சேர்த்தது. எதிரணி எவ்வளவு ரன் அடித்திருந்தாலும் அதை கவாஸ்கர் ஈடு செய்வார் என்றும், எதிரணியை எவ்வளவு ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்பதை கபிலின் பந்துவீச்சு சாதித்துவிடும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நம்பியது. 6 டெஸ்ட் போட்டித் தொடரில், சென்னையில் நடந்த மேட்ச்சில் வெற்றி, மற்ற 5 மேட்ச்களும் டிரா என்ற நிலையில், தொடரை வென்றிருந்தது கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி. தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் வெற்றி பெற்றிருந்தார் சுனில் கவாஸ்கர்.

IPLக்கு முன்பும் கிரிக்கெட்இந்திய அணி அடுத்ததாக, இங்கிலாந்து டூருக்கு ரெடியானது. அணியின் பிளேயர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது ஒரு ஷாக். இந்திய அணியின் கேப்டனாக சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராகவன் அறிவிக்கப்பட்டார். கவாஸ்கர் அதில் ஒரு ப்ளேயர் மட்டும்தான்.

“ஏன் இப்படி மட்டம் தட்டிட்டாங்க?”

“மட்டமெல்லாம் தட்டலை. இங்கிலாந்து கிரவுண்டுகளில் வெங்கட்ராகவனுக்கு கவாஸ்கரை விட நல்ல அனுபவம் உண்டு. அதனாலதான் அவரை கேப்டனாக்கியிருக்காங்க”

IPLக்கு முன்பும் கிரிக்கெட்“அதெல்லாம் இல்லை.. வேற காரணம் இருக்கு?”

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“பாம்பேகாரரை தூக்கிட்டு மெட்ராஸ்காரரை போட என்ன காரணம் இருக்கும்?”

“பாம்பேகாரர் ஆஸ்திரேலியா பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறதா பேச்சு”

“கவாஸ்கரா? பாக்கர் டீமுக்கா? சான்ஸே இல்லை.”

“பாக்கர் டீம் குறி வச்சது கபிலுக்கு. சிக்குனது கவாஸ்கராம்”

“பாக்கர் டீம்தான் க்ளைவ் லாயிட்டிலிருந்து கிரேக் சேப்பல் வரைக்கும் எல்லாரையும் வளைச்சு போட்டிருக்கே.“

கோவி.லெனின்
கோவி.லெனின்

“இருந்தாலும் இந்தியாவின் கவாஸ்கர், பாகிஸ்தான் ஜாஹிர் அப்பாஸ், சவுத் ஆப்ரிக்காவின் க்ரீக், மைக், பேரி, பொல்லாக்னு பலரையும் பாக்கர் டீம் அப்ரோச் பண்ணியிருக்காம். யார் யார் போகப்போறாங்க, யாரெல்லாம் தங்கள் நாட்டுக்காக விளையாடப் போறாங்கன்னு தெரிஞ்சிடும்”

“சவுத் ஆப்ரிக்கா கவர்ன்மென்ட் நிறவெறியோடு செயல்படுறதால அந்த நாட்டு டீமுடன் அஃபீஷியல் மேட்ச் ஆடக்கூடாதுன்னு தடை இருக்கே?”

“பாக்கர் நடத்துற வோர்ல்ட் சீரிஸ் கிரிக்கெட் மட்டும் அஃபீஷியலா? அதனால நீயும் அஃபீஷியல் இல்ல, நானும் அஃபீஷியல் இல்ல.. வா சேர்ந்து ஆடலாம். காசு… பணம் … துட்டு … மணி எல்லாம் தரேன்னு சொல்லியிருக்காரு.”

“பாக்கர் டீமுக்காக கவாஸ்கர் எத்தனை மேட்ச்களில் ஆடப் போறாராம்?”

(ஆட்டம் தொடரும்)

 

  —    கோவி.லெனின், மூத்த பத்திாிகையாளா்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.