பேஷ்..பேஷ்.. நன்னா இருக்கு … நாங்களும் உங்ககூட சேர்ந்துக்கலாமா? IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது-15
“இப்படி பட்டப்பகலுல கொளுத்துற வெயிலுல மேட்ச் வச்சா எப்படி பார்க்குறது?
சி.எஸ்கேவும் டெல்லிகேபிடல்ஸூம் சேப்பாக்கத்தில் ஆடியதைப்பார்க்க வந்திருந்தவர்களின் அங்கலாய்ப்புதான் இது. சனி,ஞாயிறு நாட்களில் இரண்டு மேட்ச்களை நடத்தினால் ஜ.பி.எல்லுக்கு நல்ல கலெக்ஷன். இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது. லைவ் டெலிகாஸ்ட் பிரச்சினை வரும். ரசிகர்களும் சங்கடப்படுவார்கள். அதனால் பகளில் தொடங்கி மாலை முடிகிறமுதல் மேட்ச். அதன்பிறகு இன்னொரு ஸ்டேடியக்கில்நைட் மேட்ச்என்று.ஐ.பி.எல். கல்லா கட்டுகிறது.
கடைசி ஓவரில் பேட்டை சுழற்றும் தோனியை பார்ப்பதற்காக மஞ்சள் ஜெர்சியுடன் வரும் ரசிகர்களுக்கோ, ஏப்ரல் மாத மதிய வெயில் வாட்டி வதைக்கிறது. ஆட்டமானது குளிர்ச்சியாக இருக்குமா என்றால், “மொக்க டீம் டெல்லிகிட்ட கூடவாடா இப்படி அடி வாங்குவீங்க” என்றுசி.எஸ்.கே.ரசிகர்கள் பொங்குகிற அளவுக்கு ஆட்டத்தின் போக்கு அமைந்துவிட்டது.
“சரி வந்தது வந்தோம். நாம ரெண்டு பேரும் செல்ஃபி எடுத்து இன்ஸடால போட்டுட்டு போவோம், டிக்கெட் கிடைக்காதவன் வயிறு எரியட்டும்” என்று வன்மப் பதிவு போட்டது ஒரு ஜோடி.
“இந்த மொக்க மேட்ச்சுக்காடா இந்த சீனு”என அதற்கு கீழே கமெண்ட் வந்தது.
இந்திய கடற்கரைக்கு வந்து நங்கூரமிட்டிருந்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல். அதில் இருந்த வணிகர்களும் மாலுமிகளும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கிடையிலான அணிகளை உருவாக்கிக் கொண்டு. இங்கிருந்த மைதானங்களில் கிரிக்கெட் விளையாட ஆர்வம் காட்டினர். இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் கனடாவிலும் மற்ற நாடுகளிலும் கிரிக்கெட் விளையாட்டை விதைத்திருந்தது இங்கிலாந்து. அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ளூர் மேட்ச்கள்கூட நடந்தன. அதன் பிறகு அவர்கள் கவனம் பேஸ் பால் பக்கம் திரும்பி விட்டது.
வெஸ்ட் இன்டீஸ் என்பது தீவுக்கூட்டம். ஜமைக்கா, ஆன்டிகுவா. பார்படோ உள்பட பல திவுகளைக்கொண்டது. அங்கே பல்வேறு இனத்தவர்கள் குடியேறி யிருத்தனர். பிரிட்டிஷ்காரர்களுடன் சேர்ந்து அவர்கள் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினர். ஆஸ்திரேலியர்களும் நியூசிலாந்துகாரர்களும் பிரிட்டிஷாரைப் போலவே கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொண்டனர். அதிகாரப்பூர்வ முதல் கிரிக்கெட் டெஸ்ட் ல்ட் மேட்ச் என்பது 1877ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பாதானத்தில் அந்த நாட்டுக்கும் இங்கிலாந்துக்கும் நடந்தது. கிரிக்கெட்டை உருவாக்கி வளர்த்த நாடு இங்கிலாந்து என்றாலும், முதல் டெஸ்ட் மேட்ச்சில் ஜெயித்தது ஆஸ்திரேலியாதான் அதுதான் கிரிக்கெட்டின் ஷ்பெஷாலிட்டி.
மேற்கு நாடுகளில் கிரிக்கெட்டை வளர்த்த இங்கிலாந்துக்கு இந்திய மண் கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனி யினர் பொழுதுபாக்கிற்காககிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தநேரத்தில், அவர்களையும், அவர்களின் ஆட்டத்தையும் பயத்துடன் பார்த்தனர் இன்றைய குஜராத் கடற்கரையை ஒட்டி இருந்த மக்கள். அந்தப் பகுதியில் இருந்த கடற்கொள்ளையர்களோ கிழக்கிந்திய கம்பெனியினருக்கு அச்சுறுத்தலாக இருந்தனர்.
உள்ளூர் ஆட்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் வியாபாரமும் பார்க்க முடியாது. விளையாடவும் முடியாது என்பது பிரிட்டிஷாருக்குத் தெரியும். கிரிக்கெட் விளையாடக்கற்றுக்கொடுத்துவிட்டால், தங்களுடைய வியாபாரத்தை நிம்மதியாகப் பார்க்கலாம்.கப்பலில் இருக்கின்ற பொருட்களுக்கும் ஆபத்து இருக்காது என நினைத்தனர். பரோடா அருகே உள்ள கேம்பே என்ற வளைகுடா பகுதிதான் இந்தியாவில் முதல் கிரிக்கெட் ஆட்டத்திற்கான களமாக அமைந்தது.

“வாங்க பழகலாம். புடிச்சிருந்தா தொடர்ந்து விளையாடுங்க” என்பது போல உள்ளூர் ஆட்கனை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர் அழைத்தார்கள். ஆடித்தான் பார்ப்போமே என்று இந்தியர்களும் பேட் பிடிக்கப்பழகினர். கிழக்கிந்தியக் கம்பெனியின் முக்கிய இந்திய நகரங்களாக மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா மூன்றும் இருந்ததால் இந்த மூன்று நகரங்களிலும் கிரிக்கெட் கிளப்கள் உருவாகின.கரையோரம் விளையாடிய நண்டு, மணல்வெளியில் ஆட்டம்போட்டு வளைக்குள் நுழைந்தது போல, கடற்கரை நகரங்களில் தொடங்கிய கிரிக்கெட் ஊருக்குள்ளும் நுழைய ஆரம்பித்தது.
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் போரில் திப்புசுல்தானை பிரிட்டிஷார் கொன்ற பிறகு, அவருடைய சீரங்கப்பட்டனத்தில் ஒரு கிரிக்கெட் கிளப் உருவானது. திப்புவின் படைவீரர்கள் பலர் கொல்லப்பட்டிருந்தனர். குடும்பத்தினரும் வாரிசுகளும் சிறைப்பிடிக்கப்பட்டனர் திப்புவின் அரண்மனையில் திவானாக இருந்தவர்கள், கணக்கு வழக்கு பார்த்தவர்கள், காரியக்காரர்களாக இருந்தவர்கள் பிரிட்டிஷார். தங்கள் ஊரில் விளையாடும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“பேஷ்.. பேஷ்.. நன்னா இருக்கு. நாங்களும் உங்ககூட சேர்ந்துக்கலாமா?”
(ஆட்டம் தொடரும்)
கோவி.லெனின், மூத்த பத்திரிகையானர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.