நடிகை திரிஷாவின் புதிய கிரைம்-திரில்லர் ”பிருந்தா” தொடரின் டீசரை Sony LIV வெளியீடு !
திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள கிரைம்-திரில்லர் தொடரின் டீசரை Sony LIV வெளியிட்டுள்ளது எல்லாம் முடிந்துவிட்டது என் நினைக்கும் நேரத்தில், இருண்ட பாதையின் முடிவில் தெரியும் சிற்றொளியாய், அவன் நம்பிக்கைக் தீபத்தை ஏந்தி வந்தாள். இறுதியில் தர்மம் எப்படி வென்றது என்ற ஒரு அற்புதமான கதைக்குத் தயாராகுங்கள். ஆகஸ்ட் 2 முதல் Sony LIV இல் பிருந்தா தொடரை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யுங்கள்.
பிருந்தா தொடர் குறித்து எழுத்தாளர் மற்றும் இயக்குனர் சூர்யா வாங்கலா “இந்தத் தொடரை Sony LIV மூலம் இந்திய பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன், பிருந்தா பார்வையாளர்களைக் கவர்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கவும் செய்யும். இது ஒரு சக்திவாய்ந்த, பெண் தலைமையிலான கதை, இந்தத் தொடரை இயக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிருந்தாவின் கதாபாத்திரம் கதையின் ஓட்டத்தில் பல மர்மங்களைக் கட்டவிழ்க்கும். திரிஷா கிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது, பிருந்தா மூலம், அந்த வகையை மறுவரையறை செய்து, தெலுங்குத் திரையுலகில் தலையெடுக்க முடியும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.
சூர்யா மனோஜ் வாங்கலா எழுதி இயக்கியுள்ள, ஆடிங் அட்வர்டைசிங் LLP மூலம் தயாரிக்கப்பட்டுள்ள, பிருந்தா மூலம் அற்புதமான திறமைகளைக்கொண்ட தென்னிந்திய ராணி திரிஷா கிருஷ்ணன் OTT உலகில் கால்பதிக்கிறார். திரைக்கதையை சூர்யா மனோஜ் வாங்கலா மற்றும் பத்மாவதி மல்லாடி ஆகியோர் ஊருவாக்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் சக்திகாந்த் கார்த்திக்கின் மெல்லிசையால் நிறைந்துள்ளத் இத்தொடரின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லா, தினேஷ் K பாபுவின் ஒளிப்பதிவு மற்றும் அன்வர் அலி எடிட்டராக பணியாற்றியுள்ளனர்.
இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மௌலி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், டிராமா, கிரைம் மற்றும் மர்மம் போன்றவற்றைத் திறமையாகப் பிணைத்து, ஒரு அற்புதமான பார்வை அனுபவத்தை வழங்குகிறது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் Sony LIVயில் பிரத்தியேகமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் இந்த க்ரைம்-த்ரில்லரைப் பார்க்கக் காத்திருங்கள்.
இணைப்பு: https://www.instagram.com/reel/C9Kmp70Sh5d/?igsh=MXNlN3c0ZHF2enVkMg==