அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரசு டாஸ்மார்க் மது பாட்டில் பெட்டிகளை திருடிய குற்றவாளிகள் கைது!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

அரசு மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் மது பாட்டில் பெட்டிகளை சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் லாரயில் ஏறி திருடிய 5 குற்றவாளிகளில் 4 குற்றவாளிகளை சம்பவம் நடந்த முன்று நாட்களுக்குள் பிடித்தது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்.

கடந்த 03.05.2025-ம் தேதி 21.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம். கள்ளக்கோட்டையில் உள்ள KALS Distillers Pvt limited கம்பெனியில் இருந்து மதுபான பாட்டில்களை ஏற்றி கொண்டு நாமக்கல் நோக்கி வந்த நிலையில், இரவு 01.45 மணியளவில் முசிறி கைகாட்டி அருகே உள்ள ஐயங்கார் பேக்கரியில் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, கடையில் இருந்த நபர்கள் லாரியில் இருந்து யாரோ பெட்டிகளை எடுப்பதாக சத்தம் போட்டுள்ளனர். இதனால், லாரியில் ஏறிய நபர் லாரியிலிருந்து குதித்து அருகில் நின்ற TN 69 R 5269 என்ற ஓம்னி காரில் தப்பி சென்றுள்ளார்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதனை கண்ட, மேற்படி லாரியின் ஓட்டுநர் கனகராஜ் என்பவர் முசிறி அரசு மருத்துவமனை அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த உதவி ஆய்வாளர் திரு. ஆசைதம்பி என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக பணியில் இருந்த முதல்நிலைக் காவலர் 1232 திரு. கந்தசாமி மற்றும் காவலர் 1221 திரு. பிரகாஷ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் மேற்படி ஓம்னி காரினை (30 கி.மீ) பின் தொடர்ந்து சென்று துறையூர் ஜான் ஹோட்டல் அருகே காரினை மடக்கி பிடித்ததில், ஓம்னி காரில் இருந்து 5 நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். அதிலிருந்த ரமேஷ்(38) த.பெ. தேவர், தெற்கு தெரு, கொசவம்பட்டி, உசிலம்பட்டி, மதுரை மாவட்டம் என்பவர் அருகிலிருந்த வாய்க்காலில் குதித்து தப்பிக்க முயற்சி செய்தபோது, இடது காலில் முறிவு ஏற்பட்டு தற்சமயம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில் முசிறி நீதிமன்ற நடுவர் மேற்படி நபருக்கு நீதிமன்ற காவலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளரர்.

மேலும், மேற்படி ஓம்னி காரை கைப்பற்றி சோதனை செய்ததில், காரில் ரூ.47,040/- மதிப்புள்ள 7 Box Black Bearal (1 Box x 48 = 336) பாட்டில்கள் இருந்துள்ளது. இதில், 5 பெட்டிகள் முழுமையாகவும், இரண்டு பெட்டிகள் உடைக்கப்பட்டும் இருந்துள்ளது. மேலும், மேற்படி எதிரியான ரமேஷ் என்பவரை விசாரணை செய்ததில், மேற்படி மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியானது சமயபுரம் டோல்கேட்டில் இருந்து பிச்சாண்டர் கோவில் பாலத்தில் மெதுவாக ஏறும்போது ஓம்னி காரில் இருந்த ரஞ்சித் என்பவர் லாரியில் ஏறியதாகவும். (1) முத்துவீரன் (27), த.பெ. செல்வம். நடு முதலிகுளம், உசிலம்பட்டி, மதுரை. (2) காளிமுத்து. நாகமலை, புதுக்கோட்டை மற்றும் (3) விஜயன் (40), த.பெ. தேவர். கொசவம்பட்டி, உசிலம்பட்டி, மதுரை (எதிரி-1 ரமேஷின் அண்ணன்) ஆகியோர் உடன் தானும் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மேலும், இது சம்மந்தமாக லாரி ஓட்டுநர் கனகராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்படி ரமேஷ் மற்றும் 4 நபர்கள் மீது முசிறி காவல் நிலைய குற்ற எண். 197/2025, ச/பி 303 (2) BNS–ன் படி 04.05.2025-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மேலும், தப்பி ஓடிய நான்கு எதிரிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வ நாகரெத்தினம், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் துறையூர் காவல் ஆய்வாளர் திரு. முத்தையன் தலைமையில் தனிப்படை அமைத்து, எதிரிகளை தேடி வந்த நிலையில்,

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

(07.05.25) தேதி முசிறி பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 1. விஜயன் 40/25, த.பெ தேவர். வடக்குத்தெரு, கொசவபட்டி, கொடிக்குளம், உசிலம்பட்டி, மதுரை, 2. முத்துவீரன் 32/25, த.பெ. செல்வம், நடுத்தெரு, நடுமுதலிகுலம், உசிலம்பட்டி, மதுரை. 3. காளிமுத்து 36/25, த.பெ. ராஜா பிள்ளையார் கோவில் தெரு ஓந்தி மலை, நாகமலை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய 3 நபர்களை விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற் கொண்டதில் தாங்கள் கடந்த 03.05.25 ம் தேதி ஓடும் லாரியில் இருந்து அரசு மதுபான பாட்டில்களை திருடியதாக ஒப்புக் கொண்டனர்.

மேற்படி முன்று நபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள ஒரு எதிரியை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் கைது செய்யப்படுவார்.

கைது செய்யப்பட்டுள்ள 1. ரமேஷ். 2. விஜயன். 3. காளிமுத்து. 4. முத்துவீரன் ஆகியோர்களுக்கு முறையே 21, 8, 18, 5 முன் வழக்குகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிறது. மேற்படி 4 எதிரிகளும் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற ஓடும் லாரியில் தார்பாயை கிழித்து பொருட்களை திருடுவது. கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது. மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு காவல் துறையினரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்து கொண்டிருந்தனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த 03.05.25 ம் தேதி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிக்க முயற்சி செய்த போது. திருச்சி மாவட்ட காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு, 30 கி.மீ தூரம் விரட்டி சென்று, மடக்கியதின் விளைவாக மட்டுமே மேற்படி எதிரிகளை கைது செய்வது சாத்தியமானது.

மேற்படி எதிரிகளை பிடிப்பதற்கு விரைந்து செயல்பட்ட முசிறி காவல் நிலைய முதல்நிலைக் காவலர் 1232 திரு. கந்தசாமி மற்றும் காவலர் 1221 திரு. பிரகாஷ் ஆகியோர்களை காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வ நாகரெத்தினம், இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து நற்சான்றிதழ் மற்றும் தலா ரூ. 1000/-பணவெகுமதி வழங்கி கௌரவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.