சி.ஆர்.பி.எப். போலீஸ் வீடியோ சர்ச்சை ; புலன் விசாரணை திசை திரும்பவதாக மாவட்ட போலீஸ் புது விளக்கம்!
சி.ஆர்.பி.எப். போலீஸ் வீடியோ சர்ச்சை ; புலன் விசாரணை திசை திரும்பவதாக மாவட்ட போலீஸ் புது விளக்கம்!ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட போலீஸ் ? வாழ்வதா? சாவதா? உதவி கேட்டு பெண் போலீஸ் கதறல் ! என்னும் தலைப்பில் அங்குசம் செய்தி வெளியிட்டது , இதன் எதிரொலியாக மாவட்ட போலீஸ் சார்பில் புது விளக்கம் ஒன்று தரப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த பெரிய கசிநாயக்கன்பட்டி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் திருஞானம். அண்ணன், தம்பிகளான இருவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதன் காரணமாக திருஞானம், வெங்கடேசன் இருவரும் தனித்தனியே கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், திருஞானம் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசனை கந்திலி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் டெல்லி மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காவலராக பணிபுரிந்து வரும் வெங்கடேசனின் மகள் பூங்கொடி, கந்திலி போலீஸார் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்தாக கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது.
இந்த நிலையில் காவலர் பூங்கொடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சார்பில் இன்று புது விளக்கமாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது, வெங்கடேசனுக்கும், அவரது சகோதரர் திருஞானந்துக்கும் இடையே நீண்ட காலமாக நிலம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட தகராறில் இருவரும் தனித்தனியே புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பட்டு இருவரும் சமாதானமாக சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 15ம் தேதி சொத்து பிரச்சனை உள்ள நிலத்தில் திருஞானம் வரப்பு அமைக்கும் பணி யில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருஞானத்துக்கும், வெங்கடேசனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் வெங்கடேசன் தரப்பில் தாக்கியதில் திருஞானத்துக்கு நெற்றி, தலை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு அவருக்கு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் 15 தையல் வரை போடப்பட்டது.
இதன் காரணமாக திருஞானம் கொடுத்த புகாரில் வெங்கடேசன் மற்றும் அவரது மகன் நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் வெங்கடேசன் கொடுத்த புகாரில் திருஞானம் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் வெங்கடேசன் தரப்பில் யாருக்கும் காயங்கள் ஏதும் இல்லை. எனவும் , மேலும், திருஞானம் மற்றும் தனலட்சுமி ஆகியோர் மீதான காயங்கள் அதிகமாக உள்ளதாக மருத்துவ சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது. அதன் அடிப்படையிலே வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே சிஆர்பிஎப் பூங்கொடி நடந்த சம்பவத்தில் உண்மை தன்மை அறியாமல் சமூகவலைத்தளங்களில் இதுபோன்ற பொய்யான தகவல்களை கூறி வீடியோக்களை பதிவிட்டு புலன் விசாரணை திசை திருப்ப முயற்சிக்கும் செயல் இது கண்டிக்கத்தக்கது. என இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
– மணிகண்டன்