கலைஞர் வீட்டுக்கு கரண்ட் கட்? காரணம் சோமாஸ் கந்தன் !
உயர்கல்வித் துறையில் ஜூனியர் பி.ஏ.வாக உள்ள சோமாஸ்கந்தன் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவது கோட்டை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
பொன்முடி கடுகடுப்பாக பேசுவதில் கை கை கேர்ந்தவர் அவர் மனைவியிடம் கூட அன்பாக பேசமாட்டாராம் ஆனால் சோமாஸ் கந்தனை பார்த்தாலே சிரித்து பேசவைக்கும் வல்லமை படைத்தவர் தான் சோமாஸ் கந்தன்
யார் இவர்?
கலைஞர் குடும்ப உறவு என்று சொல்லிக்கொண்டு உயர் கல்வித்துறையில் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். கருணாநிதியின் மகள் செல்விக்கு மிக நெருக்கம். அதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரை அசால்ட்டாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பயன்படுத்தி வருகிறாராம். இதனால் துறை செயலாளரான கார்த்திக்கேயன் கூட இவரிடம் கப்சிப் தான். இதனால் இவருடைய ஆட்டம் கொஞ்சம் அதிகமாக கோட்டையில் கேட்கிறது. அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள், கல்லூரிக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களை ஏக வசனத்தில் எகிறி வேண்டிய செயல்களை சாதிக்கிறாராம்.
எதற்கெடுத்தாலும் எரிச்சலாகும் உயர்கல்வித்துறை அமைச்சரே இவரிடம் மென்மையாக நடந்து கொள்கிறாராம் தன்னிடம் மோதினால் தலை உடைந்து விடும் என தலைமைச் செயலகமே அதிரவைத்து வருகிறார்.
பேராசிரியர்களின் டிரான்ஸ்பர், பதிவாளர்களின் நியமனம், கல்லூரிக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களின் நியமனம் எல்லாவற்றிலும் தமிழக முதல்வர் மற்றும் அவரது உதவியாளர் தினேஷ் ஆகியோரது பெயரை சொல்லி கறாராக வசூல் செய்து வருவதாக புகார்கள் கிளம்பியுள்ளது.
சமீபத்தில் இவருடைய மகள் திருமண விழாவில் முதல்வர் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். முதல்வர் என் உறவினர் ஆகையால் தொலைத்து விடுவேன் என ஆட்டம் போட்டுவருகிறாராம். முதல்வரே திருமணத்தை நடத்தி வைத்ததுடன் கலைஞர் குடும்ப உறவுகளும் திருமணத்தில் அதிகம் தலைகள் தென்பட்டதால் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கப்சிப் தான்.
இதனை சாதகமாக வைத்துக் கொண்டு எல்லாத்துறைகளிலும் மூக்கை நுழைத்து தேவையில்லாத குழப்பத்தை உண்டாக்கி வருகிறாராம். இதனால் யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று புலம்பி வருகிறார்கள் கோட்டையிலுள்ள அதிகாரிகள். இதுவாக பரவாயில்லை இவர் பல்கலைக்கழக துனைவேந்தர்கள், பதிவாளர்களை மரியாதை குறைவாக வாய்யா, போய்யா என பேசுவதால் கல்விபுல அதிகாரிகள் கலங்கிப் போய் உள்ளனர்.
திருவாரூரில் உள்ள கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளை வீட்டை இவர் தாம் மெயிண்டன் செய்கிறார். எல்லா நிர்வாக வேலைகளையும் இவருடைய பொறுப்பில் விட்டுள்ளனர். இவர் பொதுப்பணித்துறையில் கண்காணிப்பாளராக இருந்தவர் என்பதால் கடந்த 8 ஆண்டுகளாக கலைஞரின் வீட்டை நிர்வாகம் முழுவதும் இவர்தான் கவனித்து வந்துள்ளார்.
கலைஞரின் மகள் செல்விக்கு சோமாஸ் மிக நெருக்கமான உறவினர் என்பதால் இந்த வேலைகளை அவரிடம் இந்த பொறுப்பை கொடுத்துள்ளார் செல்வி ஆனால் இவர் எந்தவிதமான மெயிண்டனஸ் செலவும் செய்யவில்லை உச்சகட்டமாக 6 மாதமாக கரண்ட் பில் கட்டவில்லை என்று கடந்த 2021 ல் செப்டம்பரில் பீஸ் கட்டையை அகற்றியுள்ளனர் .
சுமார் 48 ஆயிரம் மின்சார கட்டணம் என்பதால் மின் இனைப்பை துண்டிதுள்ளனர் இறுதியில் அந்த ஊர் திமுக முக்கியப்புள்ளி தலையீடு செய்து பில்லை கட்டியுள்ளனர். இந்த விவகாரம் முதல்வரின் மனைவியின் கவனத்திற்கு செல்ல அவர் சோமாசை விசாரணை செய்ய அந்த ஏரியா ஏ.இ. ஒருவரை சொல்லி அவருடைய தலையை உருட்டியுள்ளார்.
அடுத்தபடியாக சமீபத்தில் கொடைக்கானல் பல்கலைக்கழக துணைவேந்தராக அமைச்சர் பொன்முடி இருவரை பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அமைச்சர் பரிந்துரை இல்லாத கலா என்பவரை நியமனம் செய்தார்கள். எப்படி என்று அமைச்சர் தரப்பில் விசாரிக்க அமைச்சருக்கு கூட தெரியாமல் ஆளுநர் செயலாளர் துணையோடு சோமாஸ் கந்தன் கூட்டணி வைத்து சில ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கிக் கொண்டு நியமனம் செய்துள்ளார். இந்த விவகாரம் துறை அமைச்சரான பொன்முடிக்கு தெரியவர அவர் கடுகடுப்பில் உள்ளார்.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு பணத்திற்காக பொய் புகார்களை எழுத வைத்து டிரான்ஸ்பர் செய்வது, அலுவலக உதவியாளர் முதல் கல்லூரிக்கல்வி இயக்குநர் வரை அனைவரையும் கட்டுப்படுத்துவது என அதிகார மையம்.
அடுத்ததாக பேராசியர்கள் டிரான்ஸ்பர் விவகாரங்களில் எல்லாம் நேரடியாக முதல்வர் அலுவலகம் என்று சொல்லிக் கொண்டே பல்வேறு டிரான்ஸ்பர்களை போட்டு கல்லா கட்டி வருகிறார். இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செல்லும் சோமாஸ் கந்தனுக்கு கால் கட்டுமல்ல வாய்பூட்டும் யார் போடுவார்கள் என்கிற கவலையில் உள்ளனர் உயர் கல்வித்துறையினர்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தில் உறுப்பினர் செயலாளராக சீனிவாசன் என்பவர் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே இருந்து வருகிறார். இவருடைய் பதவிக்காலம் கடந்த 2021 ல் முடிவடைந்த நிலையில் மீண்டும் சீனிவாசனுக்கே இந்தப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி நீட்டிப்பை சோமாஸ் ஆசியுடன் 10 ஸ்வீட் பாக்ஸ் உடன் வாங்கி பணி அமர்த்தியுள்ளார் சோமாஸ் மேலும் அந்த நிறுவனத்தின் சயிண்டிபிக் ஆபிசர் என்கிற பதவியை தனது மகனுக்கே வழங்கியுள்ளார் சீனிவாசன்.இது சட்ட விரோதம் மற்றும் விதிமுறை மீறல்.
மேலும் இதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக்கேயன் உறவினர் ஒருவருக்கு அலுவலக உதவியாளர் பதவியை முறைப்படி விண்ணப்பிக்காமல், பதவிக்கான போட்டிக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிந்த பிறகு அவர்கள் இஸ்டத்திற்கு அரசின் விதிமுறைகள், சட்ட விதிகளை காலில் தூக்கி போட்டு மிதித்து நாசுரம் செய்துள்ளனர். இது அப்பட்டமான அயோக்கியத்தனம்.
இது எல்லாத்திற்கும் முத்தாய்ப்பாக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக்கிற்கு மந்திரியே சோமாஸ் என்கிற நிலைதான் உள்ளது. தற்போது சைதாப்பேட்டை தாடண்டன் நகரில் உள்ள ஏ பிளாக்கில் 3 பெட் ரூம் கொண்ட வீட்டை தகுதியை மீறி வாங்கிக் கொண்டு இங்கு வைத்துதான் வசூல் வேட்டை நடத்திவருகிறார். அரசு பங்களாவை வசூல் வேட்டைக்காக பயன்படுத்துவது குறித்தும் அரசுக்கு புகாராக சென்றுள்ளது. முதல்வரின் உறவினர் என்பதால் அமைச்சர் இவரிடம் பம்மி போவதாக சொல்கிறார்கள் ” என்றனர்.
இது குறித்து சோமாஸ் கந்தனிடம் கேட்டபோது பதில் கூற விரும்பவில்லை என்றார்.
– அஜித்குமார்.