நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைமை!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது ‘நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவருமே இச்சங்கத்தின் பொறுப்புகளிலும் உறுப்பினர்களாகவும் உள்ளனர். சினிமாவின் அனைத்து சங்கங்களுடனும் நல்லுறவுடன் இச்சங்கம் உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசாலும் இச்சங்கம் அங்கீகரிக்கப்பட்டதால், அரசு சார்ப்பில் நடக்கும் சினிமா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின்படி, 2025-28 ஆண்டிற்கான தேர்தல் இருதினங்களுக்கு முன்பு நடந்தது. தேர்தல் அதிகாரியாக டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் நியமிக்கப்பட்டார். தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அங்கீகரித்து அதற்கான அத்தாட்சிக் கடிதத்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.சிவாவிடம் வழங்கினார் ஆர்.வி உதயகுமார்.
புதிய தலைமை விவரம்…
நிறுவனர் & வழிகாட்டி—பாரதிராஜா, தலைவர்—’சத்யஜோதி’ தியாகராஜன், பொதுச் செயலாளர்—டி.சிவா, துணைத் தலைவர்கள்—எஸ்.ஆர்.பிரபு, எஸ்.எஸ்.லலித்குமார், பொருளாளர்—ஜி.தனஞ்செயன், இணைச் செயலாளர்கள்—முகேஷ் மேத்தா, எஸ்.வினோத்குமார்.
செயற்குழு உறுப்பினர்கள் – கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி., விக்னேஷ் சிவன், ரமேஷ் பிள்ளை, எஸ்.லக்ஷ்மண்குமார், சுதன் சுந்தரம், கமல் போஹ்ரா, கார்த்திகேயன் சந்தானம், நிதின் சத்யா.
— மதுரை மாறன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.