அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரை மாநகராட்சிக்குள் ‘அதிரடி’ டெல்லி அதிகாரிகள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மதுரை மாநகராட்சிக்குள் ‘அதிரடி’ டெல்லி அதிகாரிகள்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் அதிரடிகளுக்குப் பஞ்சம் இருக்காது போல. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டவுடனேயே, ”இனி நமக்கெல்லாம் டபுள் ட்யூட்டிதான்” என ஈ.டி, ஐ.டி. உள்ளிட்ட அதிகாரிகள் புலம்புவதைப் போன்ற மீம்கள் தூள் பரத்தன.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்த களேபரங்களுக்கு இடையில், டெல்லியிலிருந்து பறந்துவந்த பெண் அதிகாரி உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் அதிரடியாக மதுரை மாநகராட்சிக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறார்கள். மதுரை மாநகராட்சியின் 2-வது தளத்தில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ஸ்மாட்சிட்டி திட்டத்தின் கீழான அம்ரூத் திட்டத் தின் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்காக வந்து பறந்து வந்திருக்கின்றனர். இரண்டு நாட்களாக முகாமிட்டிருந்த அவர்கள், கணக்கு வழக்குகளில் ஏகப்பட்ட இடங் களை சுழித்துவைத்துவிட்டு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கச் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கின் றனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அரசு
அரசு

https://www.livyashree.com/

என்னப்பா விவகாரம் என கண்காணிப்பு பொறியாளர் அரசுவிடமே கேட்டோம். ”வந்தார்கள் கணக்குவழக்குகளை பார்த்தார்கள். சில விசயங்களுக்கு விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அதனை எங்களது மாநகராட்சி ஆடிட்டர்களை வைத்து சரிசெய்து விடுவோம். இது வழக்கமான நடைமுறைதான்.” என்கிறார் பதட்டம் எதுவுமே இல்லாமல் “கரன்சியும் தங்கமுமாக அள்ளுன காலத்திலேயே அசராத ஆள் அவரு. இதெல்லாம் அவருக்கு சப்பை மேட்டரு” என சொல்லி சிரிக்கிறார்கள், மதுரை மாநகராட்சி சார்ந்த ஊழியர்கள் சிலர்.

–  ஷாகுல், படங்கள்: ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.