ஆம் ஆத்மி ஒழிந்தது ஒருவகையில் நல்லதே !
ஆம் ஆத்மி ஒழிந்தது ஒருவகையில் நல்லதே. காங்கிரஜை ஒழிக்க பாஜக ஆம் ஆத்மியை வளர்த்து, இன்று அதை காலி செய்துவிட்டது. கேஜரிவால், மணீஸ் சிஷோடியா தோல்வி என்பது எந்த ஊழல் ஒழிப்பை அரசியலாகக் கொண்டு ஆம் ஆத்மி பாஜக ஆட்சிக் கட்டில் ஏற பாதை அமைத்து தந்ததோ, அதே ஊழலால் இன்று மண்ணைக் கவ்வி உள்ளது.
ஊழல் ஒழிப்பு என்பது அரசியலற்ற மத்தியதரவர்க்கத்தின் மனநிலை. அதனை பரவலாக்கியதன் விளைவு இன்று டெல்லியில் ஆம் ஆத்மி பலனை அனுபவிக்கிறது.

உண்மையில் காங்கிரஸ் (6.39 %), ஆம் ஆத்மி (43.57 %) இணைந்திருந்தால் பஜகவின் (43.61 %) வாக்குகளைவிட அதிகம் பெற்று ஒருவேளை (ஒருவேளை என்பது முக்கியம்) இந்தியா கூட்டணியாக வென்றிருக்கலாம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால் அதற்கு இரண்டு கட்சிகளும் தங்கள் சுயநல அரசியலை முன்வைத்ததே காரணம். ஒருவகையில் இந்த பாஜக வெற்றி ஆம் ஆத்மியின் அகங்காரத்திற்கும், காங்கிரஸின் பிராந்திய கமிட்டிகளின் ஆணவத்திற்கும் கிடைத்த தோல்விதான்.
— ஜமாலன் தமிழ் – எழுத்தாளர்.