விஸ்வகர்மா சமுதாயத்தை இழிவாக பேசிய மத்திய நிதி அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பில் அமைப்பின் பொதுச் செயலாளர் மஹேஸ்வரன் தலைமையிலும் மாநிலத் தலைவர் ஐயப்பன் , பொருளாளர் மீனாட்சி சுந்தரம் முன்னிலையிலும் விஸ்வகர்மா சமுதாய மக்கள் ஐந்தொழில் செய்பவர்கள், 18 தொழில் செய்பவர்கள் விஸ்வகர்மா என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் கருத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகள் உடனடியாக விஸ்வகர்மா சமுதாய ஐந்தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்விஸ்வகர்மா சமுதாய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (MBC) இணைக்க வேண்டும். உரிய உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
விஸ்வகர்மா சமுதாய மக்கள் அனைவருக்கும் (ஐந்தொழில் செய்வோர்) ஒரே நடைமுறையாக “விஸ்வகர்மா” என்று சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
மாநில, மத்திய அரசுகள் செப்டம்பர் 17, விஸ்வகர்மா ஜெயந்தி விழாவினை அரசு பொது விழாவாக உடனடியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும் மத்திய நிதி அமைச்சர் தனது கருத்தை திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்
— ஷாகுல், படங்கள்-ஆனந்தன்