அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பரவும் டெங்கு காய்ச்சல் ! தெரிஞ்சுக்க வேண்டிய மூனு ரூல்ஸ்!

திருச்சியில் அடகு நகையை விற்க

இது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு

முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும்

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும்

ஆனா அதுக்கப்பறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க…

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க..

காய்ச்சலோட போக்க பாருங்க

முதல் மூன்று நாள் 102-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது..

ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான் ( க்ரிடிக்கல் காலம்)

முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது …

நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும்

அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு யுத்த காலம் …

டெங்கு காய்ச்சல் இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும் .

ரத்த டெஸ்ட் களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் பெரிதாக வெளியே தெரியாது .

டெங்கு வைரஸுடன் நடக்கும் பேராட்டத்தில் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையில் குறையும்.

ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும்.

டெங்குவை தட்டணுக்கள் குறைபாட்டை உண்டாக்கும் நோய் என்றோ அதற்கு தட்டணுக்களை அதிகரிப்பது தான் சிகிச்சை என்றோ ஒரு போக்காக எண்ணி விடாதீர்கள்.

டெங்கு என்பது வைரஸுடன் நடக்கும் தீவிர போரின் விளைவாக நமது உடலின் எதிர்ப்பு சக்தியால் ஏற்படும் கொலேட்டரல் டேமேஜ் அதாவது நமது உடலில் ஏற்படும் பாதிப்பு நிலையே டெங்கு காய்ச்சலின் அடுத்த நிலைக்கு கொண்டு சேர்க்கிறது.

டெங்குவில் சிக்கலுக்கு உள்ளாவது தட்டணுக்கள் அதன் பணியைச் செய்ய முடியாமல் போவதே தவிர வெறுமனே தட்டணுக்கள் குறைபாடு என்று டெங்குவை அணுகக் கூடாது.

டெங்குவில் மூன்று வகை உண்டு

1.சாதாரண டெங்கு காய்ச்சல்

அதாவது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் அதே சமயம், தீவிர காய்ச்சல் உடல் சோர்வு உடல் வலி என்று ஏற்படுத்தி சரியாகிவிடும்.

இது தான் பெரும்பான்மையினருக்கு ஏற்படும் டெங்குவாகும்.

2.டெங்கு உதிரப்போக்கு ஏற்படுத்தும் காய்ச்சல்

இதில் தட்டணுக்கள் அதன் ரத்த உறைய வைக்கும் பணியை சரிவர செய்யாமல் ரத்தக் கசிவு ஏற்படும். இது நூறில் ஐந்து பேருக்கு ஏற்படும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

3.டெங்கு ஷாக் சிண்ட்ரோம்

இதில் உடலில் ரத்த நாளங்களுக்கு உள்ளே இருக்க வேண்டிய நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு ரத்த நாளங்களுக்கு வெளியே கசிந்து விடும். இதனால் முறையான ரத்த அழுத்தத்தை உடலால் தக்க வைக்க இயலாது. எனவே, உடலின் பல பாகங்களுக்கும் உறுப்புகளுக்கும் ரத்தம் சரியாகப் போய்ச்சேராது.  இதன் விளைவாக சிறுநீரகம் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளும் சேதமடைந்து பாதிப்பு உள்ளாகும். இது நூறில் ஒருவருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே டெங்குவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ்

ரூல் நம்பர் ஒன்னு

டெங்கு ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும்.

ரூல் நம்பர் டூ

நீர் சத்துதான் டெங்குவோட டார்கெட் , சோ முடிஞ்ச அளவு தண்ணி ,  ஓ.ஆர்.எஸ், இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும்.

ரூல் நம்பர் 3

இதுதான் முக்கியமான விசயம் காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூனு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுகாம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம் .

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

ஆபத்து அறிகுறிகள்

– வாய்வழியாக உணவு / நீர் அருந்த முடியாத நிலை

– தொடர் வாந்தி

– வயிற்று வலி / வயிற்றுப் போக்கு

– அதீத உடல் சோர்வு

– மலம் கருப்பாக வெளியேறுவது

– பற்களில்/ மூக்கில் ரத்தம் கசிவது

– உடலில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் படை தோன்றுவது

– சிறுநீர் ஆறு மணிநேரங்களுக்கு ஒருமுறையேனும் கழிக்காத நிலை

ஆகியவை இருப்பின் உடனே யோசிக்காமல் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற வேண்டும்.

மேற்கூறிய  மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்குவிடம் இருந்து எளிதாக தப்பித்து விடலாம்.

மழை வந்தால் டெங்கு அதிகரிக்கும்.

எச்சரிக்கையுடன் இருப்போம்.

 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

 

#

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.