அங்குசம் பார்வையில் ‘ தேசிங்கு ராஜா -2’
தயாரிப்பு: ‘இன்ஃபினிட்டி’ கிரியேஷன்ஸ்’ பி.ரவிச்சந்திரன். இயக்குனர்: எஸ்.எழில். ஆர்டிஸ்ட்: விமல், ஜனா, பூஜிதா பொன்னடா, ஹர்ஷிதா, ரவி மரியா, சிங்கம்புலி, சாம்ஸ், ஆர்.வி.உதயகுமார், புகழ், மொட்டை ராஜேந்திரன். ஒளிப்பதிவு: ஆர்.செல்வா, இசை: வித்யாசாகர். பி.ஆர்.ஓ.: ஜான்சன்.
“கர்ப்பிணிகள், குழந்தைகள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம்” என சில திகில் படங்களுக்கு விளம்பரம் பண்ணுவார்கள். அதேபோல் ” உயிர் மேல் ஆசை உள்ளவர்கள், மனநலம் நன்றாக இருப்பவர்கள் இந்த ‘தேசிங்கு ராஜா -2’ வை பார்க்க வேண்டாம்” என்பதை மக்கள் நலன் கருதி நாம் சொல்கிறோம்.
எழில் சினிமாவுக்கு வந்து 25 வருசமாச்சாம். இந்த வெள்ளி விழா ஆண்டில் காமெடி என்ற பெயரில் ரசிகர்களை சாகடித்து கொள்ளி வைக்க வேண்டும் என்ற கொலை வெறியுடன் விமல் துணையுடன் வந்திருக்கார் எழில் . ஆனால் எழிலின் வெறித்திட்டம் மக்களுக்குத் தெரியும் தப்பிச்சுருவார்கள்.
ஆனால் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் பணத்துக்கும் செகண்ட் ஹீரோவாக எண்ட்ரி ஆகியிருக்கும் அவரின் மகன் ஜனாவின் சினிமா ஆசைக்கும் கொள்ளி வைத்துவிட்டார் எழில். இப்படியெல்லாம் எழுதுனா கோபமும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வரும் எழிலுக்கு. இப்படியெல்லாம் படம் எடுத்து மக்களை கொலையா கொல்லணும்னு நினைச்சா… சும்மா விட்ரமுடியுமா?
எழில் நமக்கென்ன பகையாளியா? அவருக்கும் நமக்கும் இடையில் சொத்து தகராறா? இதுக்கு முன்னாடி எழில் சினிமாக்களை நல்லாத்தானே எழுதுனோம். இப்ப இப்படி கேவலமா எடுத்தா நமக்கும் ஆத்திரமும் கோபமும் கொந்தளிக்கத் தானே செய்யும்.
— மதுரை மாறன்.