“ஃப்ரண்ட்ஷிப்புக்கு உலை வச்சுராத” — டைரக்டர் லீக் பண்ணிய சந்தானம் சீக்ரெட்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நிஹாரிகா எண்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க, பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் விழா கடந்த வாரம் சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. பட ரிலீஸுக்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் 12- ஆம் தேதி இரவு  கலகலப்பான  பிரஸ்மீட் நடந்தது . இதில் படத்தின் கதாநாயகன் சந்தானம்,  நடிகர்& தயாரிப்பாளர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர்.

முதலில் பேசினார்…

Sri Kumaran Mini HAll Trichy

*இயக்குநர் பிரேம் ஆனந்த்*

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற திருக்குறளுக்கு உதாரணமாக திகழ்பவர்கள் சந்தானமும் ஆர்யாவும் . அந்த நட்புதான் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறது. இவ்வளவு பிரமாண்டமான படத்தை தொடங்கும் போது நான் சந்தானத்திடம், முதலாளி  கண்டிப்பா நான் பயங்கர ஹார்டு வொர்க் பண்ணி இந்தப் படத்தை சக்சஸ் பண்ணி உங்களுக்கும் ஆர்யா சாருக்கும் சிலை வைப்பேன்னு சொன்னேன்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இயக்குநர் பிரேம் ஆனந்த்
இயக்குநர் பிரேம் ஆனந்த்

அதன் பின்னர் படத்தின் ஷூட்டிங் பெரிய பெரிய லொகேஷன், கேஸ்ட் & க்ரூ என நல்லபடியா போனது.  போஸ்ட் புரொடக்சன் வேலைகள் அனைத்தும்  முடிந்தபின் ஒரு நாள்  சந்தானம் என்னை அழைத்து, நீ எங்களுக்கு சிலை வைக்கலன்னாலும் பரவாயில்லை, எங்க ஃப்ரண்ட்ஷிப்புக்கு உலை வச்சிராத, சீக்கிரம் படத்தை முடிச்சுக்கொடுன்னு சொன்னார். படத்தில் நடித்து ஒத்துழைத்த சீனியர் டைரக்டர்கள் செல்வராகவன், கெளதம் மேனன் மற்றும் நடிகர் நடிகைகள்,  தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

இது ஒரு சராசரி ஹாரர் படம் கிடையாது. இதற்குள் ஒரு பேண்டஸி உலகமே உள்ளது. இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. என்னுடைய கடந்த படமான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பெரிய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவு தான். இப்படத்திற்கும் அதே ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது அனைவருக்குமான சம்மர் ட்ரீட்டாக இருக்கும். இப்படத்தை டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்வதைவிட சந்தானத்தின் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்லலாம்”.

அடுத்து….

*நடிகர்&தயாரிப்பாளர் ஆர்யா*

Flats in Trichy for Sale

“பிரேம் இந்தக் கதையை சொல்லி முடித்தவுடன் நீ என்னிடம் சொன்ன மாதிரி அப்படியே நல்ல பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்தால் சூப்பராக இருக்கும் என்றேன். படத்தை எப்படி உருவாக்கப் போகிறார் என்று ஆர்வமாக இருந்தேன். படம் முடிந்தவுடன் பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். அனைவரும் இதை 100% அனுபவிக்க முடியும் என நம்புகிறேன்.

ஆர்யாஇந்தப் படத்தை சந்தானத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது. அவருக்கு நன்றி. சந்தானமும் பிரேமும் சேர்ந்து ரொம்ப சூப்பரா இந்த படத்தை பண்ணி இருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் இந்த படத்துக்காக முழுமையாக உழைத்துள்ளார்கள். ஒட்டுமொத்த குழுவினருக்கும் பாராட்டுகள். இப்படம்  சிறந்த பொழுதுபோக்கை ரசிகர்கள் அனைவருக்கும் வழங்கும். இப்படத்தை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கும் நாங்கள் இணைவோம் என்று நம்புகிறேன். இப்படத்தை வழங்குவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் ஆதரவு தாருங்கள்”.     இறுதியில்…

*நாயகன் சந்தானம்*

“இந்த படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். ஆர்யாவும் நானும் எப்போதும் தொடர்பில் இருப்போம். அவ்வாறு ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, நீ காமெடியெனா இருக்கும்போது ஜாலியா இருப்ப, இப்பல்லாம் அந்த ஃபன் இல்லையே, ஏன்னு கேட்டார். ஹீரோவுக்கு இருக்கும் சவால்கள் குறித்தும், இன்னும் சில சிக்கல்கள் பற்றியும் அவரிடம் சொன்னேன். இந்தப்  படத்தில் நீ முழுவதுமாக இறங்கி வேலை செய். உன் மொத்த கிரியேட்டிவிட்டியையும் காட்டு. உன் பிரச்சனை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்றார்.

சந்தானம்
சந்தானம்

அப்படித்தான் இந்தப் படத்தை ஆரம்பித்து முடித்துள்ளோம். ஒரு நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாமே இதில் நிச்சயமாக உங்களை திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இயக்குநர் பிரேம் ஆனந்தை தமிழ்த் திரை உலகின் கிறிஸ்டோபர் நோலன் என்று சொல்வேன். ஏன்னா ஆனந்த் பண்ற கதை எல்லாம் ஒரு லைனில் இருக்கவே இருக்காது. பல லேயர்களை கொண்டிருக்கும். கஷ்டமான விஷயங்களை அவ்வளவு எளிதாக, சுவாரஸ்யமாக ஒன்றாக கோர்த்திருப்பார். அது எப்படி என்று நமக்கு புரியவே புரியாது. அதுதான் பிரேம் ஆனந்த்.

இந்தப் படத்தையும் அவர் அப்படித்தான் அற்புதமாக உருவாக்கியுள்ளார். அவுட்புட் ரொம்ப நன்றாக இருந்தது. அருமையான காமெடி ட்ரீட்டாக இப்படம் ரசிகர்களுக்கு அமையும். நீங்கள் அனைவரும் முழுவதுமாக என்ஜாய் செய்வீர்கள். குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருடனும் ‘இப்படத்தை படத்தை திரையரங்குகளில் பாருங்கள்”.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.